ஆர்யன் கான் கைதில் சதி: மஹாராஷ்டிரா அமைச்சர் புகார்

Updated : நவ 09, 2021 | Added : நவ 07, 2021 | கருத்துகள் (24)
Share
Advertisement
மும்பை:பாலிவுட் நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கானை கடத்தி, 25 கோடி ரூபாய் பணம் பறிக்க பா.ஜ., முன்னாள் பொதுச் செயலர் மோஹித் பாரதியா திட்டமிட்டதாகவும், அதற்கு போலீஸ் அதிகாரி சமீர் வான்கடே துணை போனதாகவும், மஹாராஷ்டிரா அமைச்சர் நவாப் மாலிக் குற்றஞ்சாட்டி உள்ளார்.சிக்க வைக்க திட்டம்மஹாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத
 ஆர்யன் கான் கைதில் சதி: மஹாராஷ்டிரா அமைச்சர் புகார்

மும்பை:பாலிவுட் நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கானை கடத்தி, 25 கோடி ரூபாய் பணம் பறிக்க பா.ஜ., முன்னாள் பொதுச் செயலர் மோஹித் பாரதியா திட்டமிட்டதாகவும், அதற்கு போலீஸ் அதிகாரி சமீர் வான்கடே துணை போனதாகவும், மஹாராஷ்டிரா அமைச்சர் நவாப் மாலிக் குற்றஞ்சாட்டி உள்ளார்.


சிக்க வைக்க திட்டம்

மஹாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள மும்பையைச் சேர்ந்த பாலிவுட் நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான், போதை பொருள் வழக்கில் சமீபத்தில் கைதாகி ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.என்.சி.பி., எனப்படும் போதை பொருள் தடுப்பு பிரிவின் மும்பை மண்டல இயக்குனர் சமீர் வான்கடே இந்த வழக்கை விசாரித்து வந்தார்.

'ஆர்யன் கான் மீதான வழக்கு போலியானது' என, மஹாராஷ்டிரா அமைச்சரும், தேசியவாத காங்.,கைச் சேர்ந்தவருமான நவாப் மாலிக் குற்றஞ்சாட்டி வருகிறார். இந்நிலையில் அமைச்சர் நவாப் மாலிக் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:ஆர்யன் கானை சொகுசு கப்பலுக்கு வரவழைத்து, அவரை போதை பொருள் வழக்கில் சிக்க வைக்க திட்டம் தீட்டப்பட்டது. இதற்கு, மும்பை பா.ஜ., முன்னாள் பொதுச் செயலர் மோஹித் பாரதியா மூளையாக செயல்பட்டுள்ளார்.


கண்காணிப்பு



மும்பை புறநகரான ஓஷிவாராவில் உள்ள சுடுகாடு ஒன்றில் மோஹித்தும், சமீர் வான்கடேவும் சந்தித்து இந்த திட்டம் குறித்து பேசினர். சமீர் வான்கடேவின் நல்ல நேரம், அந்த சந்திப்பின் கண்காணிப்பு, 'வீடியோ' காட்சிகள் கிடைக்கவில்லை. அங்குள்ள கண்காணிப்பு கேமராக்கள் செயல்பாட்டில் இல்லை.

மோஹித் பாரதியாவின் உறவினர் ரிஷப் சச்தேவ் என்பவர் வாயிலாக ஆர்யன் கானுக்கு வலை விரிக்கப்பட்டது. அவரது அழைப்பின் அடிப்படையில், பிரதிக் கபா மற்றும் ஆமிர் பர்னிச்சர்வாலா ஆகியோர் ஆர்யன் கானை சொகுசு கப்பலுக்கு அழைத்து வந்துள்ளனர். ஆர்யன் கானுடன் இருந்த இவர்கள் ஏன் கைது செய்யப்படவில்லை?ஆர்யனை திட்டமிட்டு வரவழைத்து அவரை போதை பொருள் வழக்கில் சிக்க வைத்துள்ளனர். அவரை கடத்தி, 25 கோடி ரூபாய் பறிக்க முயற்சி செய்துள்ளனர்.கடைசியில் 18 கோடி ரூபாய் பெற்றுக் கொள்ள முடிவு செய்யப்பட்டு, 50 லட்சம் ரூபாய் முன்பணமாக ஷாருக் கான் தரப்பில் இருந்து கொடுக்கப்பட்டு உள்ளது.


விசாரணை

இந்த கடத்தல் மற்றும் பணம் பறிப்புக்கு, பா.ஜ.,வைச் சேர்ந்த மோஹித் திட்டம் தீட்டியுள்ளார். அதற்கு விசாரணை அதிகாரி வான்கடே உடந்தையாக இருந்துள்ளார்.இவ்வாறு அவர் கூறினார்.அமைச்சர் நவாப் மாலிக்கின் மருமகன் சமீர் மாலிக்கை, போதை பொருள் வழக்கில் வான்கடே கடந்த ஜனவரியில் கைது செய்தார். இதற்கிடையே விசார ணைக்கு ஆஜராகும்படி ஆர்யன் கானுக்கு, சிறப்பு குழு சம்மன் அனுப்பியுள்ளது. அதற்கு 'தனக்கு கொரோனா அறிகுறி இருப்பதால் விசாரணைக்கு ஆஜராக முடியாது' என, ஆர்யன் தெரிவித்துள்ளார்.


அவதுாறு வழக்கு

ஆர்யன் கான் வழக்கின் விசாரணை அதிகாரி சமீர் வான்கடே, போலி சான்றிதழ் சமர்ப்பித்து ஐ.ஆர்.எஸ்., பணியில் சேர்ந்ததாக, அமைச்சர் நவாப் மாலிக் குற்றஞ்சாட்டி உள்ளார். இந்நிலையில், தன் குடும்பத்தினர் மீது அவதுாறு கருத்துகளை தெரிவித்துவரும் அமைச்சர் நவாப் மாலிக் மீது, 1.25 கோடி ரூபாய் இழப்பீடு கோரி, சமீர் வான்கடேவின் தந்தை தியானேஷ்வர் வான்கடே, மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
yavarum kelir - yadhum vore ,இந்தியா
09-நவ-202114:12:34 IST Report Abuse
yavarum kelir சக்கரத்தின் பின்னால் சல்மான் என்று சொல்லி தனியாக இறந்த மெய்க்காப்பாளரின் கதை........
Rate this:
Cancel
Duruvesan - Dharmapuri,இந்தியா
08-நவ-202122:15:22 IST Report Abuse
Duruvesan இவன் மருமகன் இப்போது பேயிலில், வாட்றா சபரீசு 😭
Rate this:
Cancel
Ramesh - chennai,இந்தியா
08-நவ-202121:02:41 IST Report Abuse
Ramesh Please s him to Afganistan for few years
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X