காதல் ஜோடி தற்கொலை | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காதல் ஜோடி தற்கொலை

Added : நவ 07, 2021
Share
செங்கம்-செங்கம் அருகே, காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது.திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த நாகப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவகுமார், 26. இவரது தாய் மாமன் வினோத்குமார், பெங்களூரில் குடும்பத்துடன் வசிக்கிறார். இவரது மகள் நிகிதா, 18. சிவகுமார், நிகிதா ஆறு மாதங்களாக காதலித்து வந்தனர். நிகிதாவை, சிவகுமார் பெண் கேட்டுள்ளார். நிகிதா கல்லுாரி படிப்பு

செங்கம்-செங்கம் அருகே, காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த நாகப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவகுமார், 26. இவரது தாய் மாமன் வினோத்குமார், பெங்களூரில் குடும்பத்துடன் வசிக்கிறார். இவரது மகள் நிகிதா, 18. சிவகுமார், நிகிதா ஆறு மாதங்களாக காதலித்து வந்தனர்.

நிகிதாவை, சிவகுமார் பெண் கேட்டுள்ளார். நிகிதா கல்லுாரி படிப்பு முடித்தவுடன் திருமணம் செய்து வைப்பதாக, வினோத்குமார் கூறியுள்ளார்.தொடர்ந்து சிவகுமாரும், நிகிதாவும் தினமும் மொபைல் போனில் பேசியுள்ளனர். வினோத்குமார், மகளை கண்டித்துள்ளார். இதையடுத்து, பெங்களூரு சென்ற சிவகுமார், நிகிதாவை தன் ஊருக்கு அழைத்து வந்தார். நேற்று முன்தினம் இரவு, அங்குள்ள வயல் வெளியில் இருவரும், விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X