பொது செய்தி

இந்தியா

பிரெஞ்ச் கவுன்சிலர் தேர்தல் விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு

Added : நவ 07, 2021
Share
Advertisement
புதுச்சேரி-பிரெஞ்ச் கவுன்சிலர் தேர்தல், புதுச்சேரியில் நேற்று விறுவிறுப்பாக நடந்தது. இந்தியாவில், பிரெஞ்ச் குடிமக்கள் சபை கவுன்சிலர்களை தேர்ந்தெடுக்க வசதியாக வட மாநிலங்கள், தென் மாநிலங்கள் என இரண்டு தொகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன. வட மாநிலங்களில் நால்வர், தென் மாநிலங்களில் மூவர், கவுன்சிலராக தேர்வு செய்யப்படுவர்.தென் மாநில தொகுதியில் புதுச்சேரி, தமிழகம், கேரளா,
 பிரெஞ்ச் கவுன்சிலர் தேர்தல்  விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு

புதுச்சேரி-பிரெஞ்ச் கவுன்சிலர் தேர்தல், புதுச்சேரியில் நேற்று விறுவிறுப்பாக நடந்தது. இந்தியாவில், பிரெஞ்ச் குடிமக்கள் சபை கவுன்சிலர்களை தேர்ந்தெடுக்க வசதியாக வட மாநிலங்கள், தென் மாநிலங்கள் என இரண்டு தொகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

வட மாநிலங்களில் நால்வர், தென் மாநிலங்களில் மூவர், கவுன்சிலராக தேர்வு செய்யப்படுவர்.தென் மாநில தொகுதியில் புதுச்சேரி, தமிழகம், கேரளா, ஆரோவில், அந்தமான் தீவுகளில் வசிக்கும் பிரெஞ்ச் குடியுரிமை பெற்றவர்கள் ஓட்டளிப்பர். பிரெஞ்ச் கவுன்சிலர் தேர்தல், நேற்று காலை 8:௦௦ முதல் மாலை 6:௦௦ மணி வரை நடந்தது.

புதுச்சேரியில் பிரெஞ்ச் துணை துாதரகம், லிசே பிரான்சே உட்பட நான்கு பூத்கள், காரைக்கால், சென்னையில் தலா ஒன்று என ஆறு பூத்களில் ஓட்டுப்பதிவு நடந்தது. பிரெஞ்ச் குடியுரிமை பெற்ற 4,600 பேர் ஓட்டளிக்கும் உரிமை பெற்றுள்ளனர். ஓட்டுச் சீட்டு முறையில் ஓட்டுப் பதிவு நடந்தது. வாக்காளர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்து, கைகளில் கிருமிநாசினி தெளிக்கப் பட்டது.தென் மாநில பிரெஞ்ச் கவுன்சிலர் தேர்தலில், மொத்தம் ஐந்து அணிகளைச் சேர்ந்த 30 பேர் போட்டியிடுகின்றனர். ஒவ்வொரு அணியிலும் ஆறு பேர் இடம் பெற்றுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X