அரசியல் செய்தி

தமிழ்நாடு

மூதாட்டிக்கு வீடு: அமைச்சர் ஆய்வு

Added : நவ 07, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
புதுக்கோட்டை-'கஜா' புயலால் கூரை வீடு சேதமடைந்து தவித்த, 76 வயது மூதாட்டிக்கு, அரசு சார்பில் வீடு கட்டித்தர முதல்வர் உத்தரவிட்டுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே எம்.ஜி.ஆர்., நகரைச் சேர்ந்தவர் மூதாட்டி லோகாம்பாள், 76; கணவர் இறந்து விட்டார். மூத்த மகன் கருப்பையா, 50. இவரது மனைவி 10வது பிரசவத்தில், குழந்தையுடன் இறந்து விட்டார்.கருப்பையாவுக்கு 20 முதல் 5 வயது வரை
 மூதாட்டிக்கு வீடு: அமைச்சர் ஆய்வு

புதுக்கோட்டை-'கஜா' புயலால் கூரை வீடு சேதமடைந்து தவித்த, 76 வயது மூதாட்டிக்கு, அரசு சார்பில் வீடு கட்டித்தர முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே எம்.ஜி.ஆர்., நகரைச் சேர்ந்தவர் மூதாட்டி லோகாம்பாள், 76; கணவர் இறந்து விட்டார். மூத்த மகன் கருப்பையா, 50. இவரது மனைவி 10வது பிரசவத்தில், குழந்தையுடன் இறந்து விட்டார்.கருப்பையாவுக்கு 20 முதல் 5 வயது வரை ஒன்பது மகள்கள், மகன்கள் உள்ளனர். இதில் இருவருக்கு மட்டும் திருமணம் ஆகியுள்ளது.

கருப்பையா மதுவுக்கு அடிமையாகி, குடும்பத்தை கவனிப்பதில்லை. பாட்டி லோகாம்பாள், ஏழு பேரன், பேத்திகளை சிரமப்பட்டு வளர்த்து வருகிறார்.கடந்த 2018ம் ஆண்டு வீசிய கஜா புயலில், இவரது குடிசை வீடு முழுமையாக சேதமடைந்தது. இதையடுத்து, அவருக்கு அரசு சார்பில் வீடு கட்டி தரவும், முதியோர் உதவித்தொகை வழங்கவும் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.இந்நிலையில், லோகாம்பாளுக்கு அரசு சார்பில் புதிய வீடு கட்ட வழங்கிய ஆணையை, அப்போதைய திருவரங்குளம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பறித்து சென்றனர்.

இது குறித்து, 'தினமலர்' நாளிதழில் நேற்று வெளியானது.இதைப் பார்த்த முதல்வர் ஸ்டாலின், மூதாட்டிக்கு உடனடியாக வீடு கட்டித்தர உத்தரவிட்டார்.முதல்வர் அறிவுறுத்தல்படி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், கலெக்டர் கவிதாராமு ஆகியோர், நேற்று மாலை 4:30 மணிக்கு மூதாட்டியின் கூரை வீட்டை பார்வையிட்டனர். 'விரைவில் பசுமை வீடு கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும்' என, உறுதி அளித்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
11-நவ-202103:02:32 IST Report Abuse
Bhaskaran இந்தக்காலத்தில் பத்து பிள்ளை பெத்து போட்டாரு அரசு தான் உதவிசெய்யனும்
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
11-நவ-202102:58:39 IST Report Abuse
Bhaskaran வட்டார வளர்ச்சி அதிகாரிகள் அம்போன்னு போகணும்
Rate this:
Cancel
R.RAMACHANDRAN - Sundivakkam,இந்தியா
08-நவ-202116:15:34 IST Report Abuse
R.RAMACHANDRAN வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஒரு பசுமை வீட்டிற்கு ரூபாய் ஐம்பதாயிரம் வாங்கிக்கொண்டு பணக்காரர்களுக்கு ஒதுக்குகின்ற குற்றத்தை செய்வதால் ஏழை கிழவிக்கு இலவசமாக வீடு கொடுத்தால் இவர்கள் லஞ்ச ஊழல் தொழில் பாதிக்கும் என்பதால் வீடு கட்ட வழங்கிய ஆணையை அப்போதைய திருவரங்குளம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பறித்து சென்றுள்ளனர்.இதனை தினமலர் வெளிப்படுத்தியதை தற்போதைய முதலமைச்சர் படித்ததால் ஏழைக்கு தீர்வு கிடைத்துள்ளது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X