பொது செய்தி

தமிழ்நாடு

பவானிசாகரில் உபரி நீர் திறப்பு

Added : நவ 07, 2021
Share
Advertisement
ஈரோடு-பவானிசாகர் அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்ட நிலையில், பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணை நீர்மட்டம், 105 அடி கொண்டது. நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப் பகுதியில், ஒரு வாரத்துக்கும் மேலாக மழை பெய்கிறது. இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் உயரத்
 பவானிசாகரில் உபரி நீர் திறப்பு

ஈரோடு-பவானிசாகர் அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்ட நிலையில், பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணை நீர்மட்டம், 105 அடி கொண்டது. நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப் பகுதியில், ஒரு வாரத்துக்கும் மேலாக மழை பெய்கிறது. இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் உயரத் துவங்கியது.

நேற்று காலை நிலவரப்படி 103.86 அடியாக நீர்மட்டம் இருந்தது. நீர்வரத்து, 5,025 கன அடியாக இருந்தது. அணை பாதுகாப்பு கருதி நீர்மட்டம், 104 அடியை எட்டியதும் பவானி ஆற்றில் உபரிநீர் திறக்கப்படும் என பொதுப்பணித் துறை அதிகாரிகள் அறிவித்தனர். இதன்படி நேற்று மாலை 4:45 மணிக்கு நீர்மட்டம், ௧௦௪ அடியை தொட்டதும், பவானி ஆற்று மதகுகள் வழியாக 3,500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. ஏற்கனவே, கீழ்பவானி வாய்க்கால் பாசனத்துக்கு, 1,500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், உபரி நீராக 3,500 கன அடி திறக்கப்பட்டுள்ளதால், 5,000 கன அடியாக உயர்ந்துள்ளது. இதனால் பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு, வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

மூல வைகைதேனி மாவட்டம், வைகை அணைக்கு முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது மூல வைகை ஆறு. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்யும் மழையில் பல சிற்றாறுகள் இணைந்து, மூல வைகை ஆறாகிறது. இந்த ஆறு வருஷநாடு, மயிலாடும்பாறை, கண்டமனுார், குன்னுார் வழியாக வைகை அணையில் சேர்கிறது.பல கி.மீ., துாரம் மணல் பரப்பாக உள்ள வைகை ஆற்றில், தற்போது பெய்யும் மழையால் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது.

இதனால், கரைப் பகுதி விவசாய கிணறுகளில் நீர் சுரப்பு அதிகரித்துள்ளது. விவசாயிகள் காய்கறிகள், நெல், கரும்பு, வாழை பயிர் சாகுபடியை துவக்கி உள்ளனர்.மயிலுாற்று அருவிபெரம்பலுார் மாவட்டத்தின் மேற்கு எல்லையாக விளங்கும் பச்சைமலை அடிவாரத்தில் உள்ளது லாடபுரம் என்ற குக்கிராமம். இக்கிராமத்தில் இருந்து, சரவணபுரம் கிராமத்துக்கு செல்லும் வழியில், மயிலுாற்று அருவி உள்ளது.மயில் தோகையை விரித்திருப்பது போல் தோற்றம் கொண்டதால், மயிலுாற்று அருவி என அழைக்கப்படுகிறது.

வடகிழக்கு பருவ மழையால், இங்கு தண்ணீர் கொட்டி வருகிறது.இதனால், பல மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள், குடும்பத்துடன் வந்து உற்சாக குளியல் போட்டு செல்கின்றனர். நேற்று விடுமுறை நாள் என்பதால், சுற்றுலா பயணியர் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. மாணவர் உடல் மீட்புதேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள மேல்மங்கலம் வேத பாடசாலையில் மதுரையைச் சேர்ந்த சுந்தரநாராயணன், 19, சென்னையைச் சேர்ந்த மணிகண்டன், 21, படித்தனர்.இருவரும், 5ம் தேதி வராகநதிக்கு சென்று வெள்ளப்பெருக்கை வேடிக்கை பார்த்தனர்.

அப்போது ஆற்றில் கால் வைத்ததில், தண்ணீரில் இழுத்து செல்லப்பட்டனர். சுந்தரநாராயணன் உடலை தீயணைப்பு வீரர்கள் நேற்று முன்தினம் மீட்டனர். நேற்று காலை 11:00 மணிக்கு மணிகண்டன் உடல் மீட்கப்பட்டது.வீடூர் அணை திறப்புவிழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே வீடூர் அணை அமைந்துள்ளது. இந்த அணை வாயிலாக, 3,200 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. தொடர் மழையால், 32 அடி உயரமுள்ள அணையில், 31.1 அடியாக நீர்மட்டம் உயர்ந்தது.இதையடுத்து, நேற்று காலை 6:00 மணியளவில், அணையின் ஒரு மதகு திறக்கப்பட்டு 529 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டது.

அணையில் பொதுமக்கள் குளிக்காத வகையில், போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கிராமங்கள் தத்தளிப்புதிருச்சி மாவட்டம், மணப்பாறை, வையம்பட்டி, மருங்காபுரி ஆகிய பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல், நேற்று அதிகாலை வரை கனமழை தொடர்ந்து பெய்தது. அப்பகுதிகளில் உள்ள ஏரிகள், குளங்கள் நிரம்பி வழிந்தன.நிரம்பி வழிந்த தண்ணீர், விவசாய நிலங்களில் புகுந்து, 5 அடி அளவுக்கு தண்ணீர் நிற்கிறது. இதனால் சமீபத்தில் நடவு செய்த பயிர்கள் சேதம் அடைந்துள்ளன. மணப்பாறை சுற்றுவட்டார பகுதியில் 100க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் சேதம் அடைந்துள்ளன. இது, விவசாயிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X