சம்பவம் செய்தி

தமிழ்நாடு

1.8 கிலோ தங்கம் கொள்ளை கோவையில் ஏழு பேர் கைது

Added : நவ 07, 2021
Share
Advertisement
கோவை--கோவையில் வியாபாரியிடம், 1.8 கிலோ தங்க நகை மற்றும், 7.5 லட்சம் ரூபாய் கொள்ளையடித்துச் சென்ற, ஏழு பேரை போலீசார் கைது செய்தனர்.கோவை, வடவள்ளியைச் சேர்ந்தவர் சண்முகம், 68; தங்க நகைகளை மொத்தமாக வாங்கி, விற்பனை செய்து வருகிறார். நவ., 30ல், சத்தியமங்கலத்தில் உள்ள கடைகளில், நகை விற்பனை செய்து 7.5 லட்சம் ரூபாய் வைத்து இருந்தார்.'ஹால்மார்க்' முத்திரைபதிப்பதற்காக, 1 கிலோ 890 கிராம் தங்க

கோவை--கோவையில் வியாபாரியிடம், 1.8 கிலோ தங்க நகை மற்றும், 7.5 லட்சம் ரூபாய் கொள்ளையடித்துச் சென்ற, ஏழு பேரை போலீசார் கைது செய்தனர்.

கோவை, வடவள்ளியைச் சேர்ந்தவர் சண்முகம், 68; தங்க நகைகளை மொத்தமாக வாங்கி, விற்பனை செய்து வருகிறார். நவ., 30ல், சத்தியமங்கலத்தில் உள்ள கடைகளில், நகை விற்பனை செய்து 7.5 லட்சம் ரூபாய் வைத்து இருந்தார்.'ஹால்மார்க்' முத்திரைபதிப்பதற்காக, 1 கிலோ 890 கிராம் தங்க நகைகளை வாங்கி, நள்ளிரவில் கோவை வந்துள்ளார். வடவள்ளி --- தொண்டாமுத்துார் ரோட்டில், இருசக்கர வாகனத்தில் சென்றபோது, திடீரென பைக்கில் வந்த இருவர், சண்முகத்தை தாக்கி, நகைகள் மற்றும், 7.5 லட்சம் ரூபாயை பறித்து தப்பினர்.

வடவள்ளி போலீசார் நான்கு தனிப்படைகள் அமைத்து, கொள்ளையரை தேடி வந்தனர். கண்காணிப்பு கேமரா பதிவுகள் அடிப்படையில், நேற்று ஏழு பேரை கைது செய்தனர்.போலீசார் கூறியதாவது:சண்முகம், வழக்கமாக கோவை தாமஸ் வீதியில் உள்ள ஒரு கம்பெனியில், நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை பதித்து வந்துள்ளார். அங்கு, ராஜஸ்தானைச் சேர்ந்த ஐந்து வாலிபர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இவர்கள், சண்முகத்தை நோட்டமிட்டு, தங்களது நண்பர்களான, அப்துல் ஹக்கீம், 46; அஷ்ரப் அலி, 44 ஆகியோருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள், சண்முகத்தை பின்தொடர்ந்து, கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியுள்ளனர். கொள்ளைக்கு மூளையாக செயல்பட்ட ஏழு பேரை கைது செய்துள்ளோம். மேலும் சிலருக்கு தொடர்பு உள்ளது. அவர்களிடம் தான், கொள்ளை அடிக்கப்பட்ட பணம் மற்றும் நகைகள் உள்ளன. அவர்களை தேடும் பணி, தீவிரமாக நடந்து வருகிறது.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X