கடலுார் மாவட்டத்தில்  பஸ்களுக்கு பாதுகாப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கடலுார் மாவட்டத்தில்  பஸ்களுக்கு பாதுகாப்பு

Added : நவ 07, 2021
Share
கடலுார்-கடலுார் மாவட்டத்தில் அரசு பஸ்களுக்கு, போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.வன்னியர்களுக்கான 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, கடலுார் மாவட்டத்தில் அரசு பஸ் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தியதாக பா.ம.க.,வினர் 29 பேர் கைது செய்யப்பட்டனர்.மாவட்ட மக்கள் அச்சமின்றி பயணிக்கவும், அரசு பஸ்களை சேதப்படுத்துவதை தடுக்கவும் பஸ்களில் போலீஸ்

கடலுார்-கடலுார் மாவட்டத்தில் அரசு பஸ்களுக்கு, போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.வன்னியர்களுக்கான 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, கடலுார் மாவட்டத்தில் அரசு பஸ் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தியதாக பா.ம.க.,வினர் 29 பேர் கைது செய்யப்பட்டனர்.மாவட்ட மக்கள் அச்சமின்றி பயணிக்கவும், அரசு பஸ்களை சேதப்படுத்துவதை தடுக்கவும் பஸ்களில் போலீஸ் பாதுகாப்பளிக்க எஸ்.பி., சக்திகணேசன் உத்தரவிட்டார். இதையடுத்து, கடலுார் மாவட்டத்தில் கிராமங்களுக்கு செல்லும் அரசு பஸ்களில், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.மாலை மற்றும் அதிகாலையில் செல்லும் பஸ்களை பட்டியல் எடுத்து, பஸ்களுடன் பைக்கில் தொடர்ந்து சென்று, போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.நெடுஞ்சாலை மற்றும்முக்கிய சாலைகளில் இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.,க்கள் தலைமையில், போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X