பொது செய்தி

தமிழ்நாடு

சாய் நகர் சாலையெல்லாம் குளம்; தீர்வுக்காக மக்கள் தவம்!

Added : நவ 07, 2021
Share
Advertisement
வாகன ஓட்டிகள் தடுமாற்றம்தடாகம் ரோடு, இடையர்பாளையம் - வடவள்ளி ரோடு, லட்சுமி நகர் அருகில், சாலை குண்டும் குழியுமாக உள்ளது; வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர்.- பாலன், லட்சுமி நகர்.குடியிருப்பு பகுதியில் குளம்போத்தனுார், சாய் நகர், சத்யநாராயணா நகர், 9வது வீதியில், சாலை சிதிலமடைந்து குழியாக உள்ளது. மழை நேரங்களில், இச்சாலை முழுவதும் நீர் நிரம்பி குளம் போல், மாறிவிடுகிறது. நடந்து

வாகன ஓட்டிகள் தடுமாற்றம்தடாகம் ரோடு, இடையர்பாளையம் - வடவள்ளி ரோடு, லட்சுமி நகர் அருகில், சாலை குண்டும் குழியுமாக உள்ளது; வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர்.- பாலன், லட்சுமி நகர்.

குடியிருப்பு பகுதியில் குளம்போத்தனுார், சாய் நகர், சத்யநாராயணா நகர், 9வது வீதியில், சாலை சிதிலமடைந்து குழியாக உள்ளது. மழை நேரங்களில், இச்சாலை முழுவதும் நீர் நிரம்பி குளம் போல், மாறிவிடுகிறது. நடந்து செல்லக்கூட வழியின்றி, குடியிருப்புவாசிகள் அவதிப்படுகின்றனர்.- சிவகுமார், சாய் நகர்.

விளக்கு எரிவதில்லைமேட்டுப்பாளையம் ரோடு, துடியலுார், வி.கே.எல்.நகர், ஐந்தாவது வீதியில் உள்ள, மின் கம்பங்களில், விளக்குகள் எரிவதில்லை. பலமுறை மின் வாரியத்தில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.- ஜெயகுமார், வி.கே.எல்.நகர்.

கேம்ப் ரோட்டில் குப்பை மலைவெள்ளலுார், 15வது வார்டுக்கு உட்பட்ட, கேம்ப் ரோட்டில், சாலையோரம் குவிக்கப்படும் குப்பையை அப்புறப்படுத்துவதில்லை; சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.- ராமமூர்த்தி, வெள்ளலுார்.

குடிநீர் தொட்டி அருகே குழாய் உடைப்புமருதமலை, ஐ.ஓ.பி., காலனி, ரங்கபாஷ்யம் நகர், திருவள்ளுவர் வீதியில் உள்ள, மேல்நிலை குடிநீர் தொட்டி அருகே, பிரதான குழாய் உடைப்பால், குடிநீர் வீணாகி சாலையில் ஓடுகிறது.- மிதுன், திருவள்ளுவர் வீதி.

நிரம்பி வழியுது குப்பை தொட்டிதிருச்சி ரோடு, ராமநாதபுரம், நஞ்சுண்டாபுரம் ரோடு, பஜனை கோவில் வீதி, சமுதாய கூடம் அருகில், குப்பை தொட்டி நிரம்பி வழிகிறது. இதன் அருகிலேயே குப்பை குவிக்கப்படுகிறது; சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.- நரேந்திரன், ஒலம்பஸ்.

நடந்தே போயிறலாம் போலகஸ்துாரி நாயக்கன்பாளையம் பஸ் ஸ்டாப் முதல் ஊருக்குள் செல்லும் வரை சாலை ஆங்காங்கே துண்டு துண்டாக வெட்டப்பட்டுள்ளது. வாகனங்களில் செல்வோர் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர்.- நிவாஸ்,

கஸ்துாரிநாயக்கன் பாளையம்.

கெஞ்சினாலும் பயனில்லைமாநகராட்சி, 55வது வார்டுக்கு உட்பட்ட, சிங்காநல்லுார், இ.எஸ்.ஐ., மருத்துவமனை அருகில், மாநகராட்சி சார்பில், வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகையின் அருகிலேயே குப்பை குவிக்கப்பட்டுள்ளது.- முத்துகுமார், பாப்பநாயக்கன்பாளையம்.

ரோட்டை புதுப்பிக்கணும்அவிநாசி ரோடு, கோல்டுவின்ஸ் - வீரியம்பாளையம் செல்லும் ரோடு, குண்டும் குழியுமாக உள்ளது. சுமார், 4 கி.மீ., துாரம் இதேநிலையில் சாலை இருப்பதால், வாகன ஓட்டிகள் படாதபாடு படுகின்றனர். இச்சாலையை புதுப்பிக்க வேண்டும்.- கிருஷ்ணன், வீரியம்பாளையம்.

குப்பை தொட்டி வைக்கணும்நகரில் மத்தியில் உள்ள, சாமி ஐயர் புது வீதியில், குப்பை தொட்டி இல்லாததால், சாலையோரம் குவிக்கப்படுகிறது. இப்பகுதியில் குப்பை தொட்டி வைத்து, கொட்டப்படும் குப்பையை முறையாக அப்புறப்படுத்த வேண்டும்.- விஜேந்திரன், சாமி ஐயர் புது வீதி.

குப்பை குடோனானது சாஸ்திரி ரோடுராம்நகர் உள்ளிட்ட சுற்றுப்பகுதி வீதிகளில் குவிக்கப்படும் குப்பையை அள்ளிவரும் சுகாதார பணியாளர்கள், இவற்றை குடோனில் சேர்த்து வைப்பதுபோல், சாஸ்திரி ரோட்டில் குவித்து வைத்துள்ளனர்; துர்நாற்றம் வீசுகிறது.- சிவா, ராம்நகர்.

சாலையை சீரமைக்கணும்செல்வபுரம், எல்.ஐ.சி., காலனி, நேரு நகரில், ரோடு குண்டும் குழியுமாக உள்ளது. மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு பணிகளின் போது, சாலை தோண்டப்பட்டு முறையாக மூடப்படாததால், சாலை முழுவதும் குழியாக மாறிவிட்டது. மழை நேரங்களில், குளம் போல் தேங்கி நிற்கும் நீரில், கொசு உற்பத்தியாகி, சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இச்சாலையை சீரமைக்க வேண்டும்.- பழனிசாமி, நேரு நகர்.

நாய் தொல்லையால் அவதிகோவைபுதுார் - சுண்டக்காமுத்துார் ரோடு, கோகுலம் காலனி அருகில், சாலையில் சுற்றித்திரியும் தெருநாய்களால், மக்கள் அவதிப்படுகின்றனர். இரு சக்கர வாகனங்களை துரத்தும் இவற்றால், வாகன ஓட்டிகள் தடுமாறி விழந்து, விபத்துக்குள்ளாகின்ற னர். இதேபோல், அனைத்து பகுதிகளிலும் நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுப்பது அவசியம்.- மரகதம், கோவைபுதுார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X