சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இனிப்பு சாப்பிட்ட குழந்தைக்கு வாந்தி

Added : நவ 07, 2021
Share
Advertisement
கோவை:இனிப்பு சாப்பிட்ட குழந்தைக்கு வாந்தி ஏற்பட்டதால், சம்மந்தப்பட்ட கடைக்கு உணவுத்துறை அதிகாரிகள் நோட்டீஸ் அளித்துள்ளனர்.கோவை, கணபதி பகுதியில் உள்ள ஒரு ஸ்வீட் ஸ்டாலில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கணபதிபுதுார் பகுதியை சேர்ந்த ஒருவர் இனிப்பு வாங்கியுள்ளார். அந்த இனிப்பை தனது இரண்டு குழந்தைகளுக்கு கொடுத்துள்ளார்.அதனை சாப்பிட்ட நான்கு வயது குழந்தை வாந்தி

கோவை:இனிப்பு சாப்பிட்ட குழந்தைக்கு வாந்தி ஏற்பட்டதால், சம்மந்தப்பட்ட கடைக்கு உணவுத்துறை அதிகாரிகள் நோட்டீஸ் அளித்துள்ளனர்.கோவை, கணபதி பகுதியில் உள்ள ஒரு ஸ்வீட் ஸ்டாலில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கணபதிபுதுார் பகுதியை சேர்ந்த ஒருவர் இனிப்பு வாங்கியுள்ளார். அந்த இனிப்பை தனது இரண்டு குழந்தைகளுக்கு கொடுத்துள்ளார்.அதனை சாப்பிட்ட நான்கு வயது குழந்தை வாந்தி எடுத்துள்ளது. பதறி போன பெற்றோர், இனிப்பை ஆய்வு செய்து பார்க்கையில், தலைமுடி இருப்பது தெரியவந்தது.இது குறித்து சம்பந்தப்பட்ட ஸ்வீட் ஸ்டாலுக்கு சென்று புகார் அளித்துள்ளார். கடையில் இருந்தவர்கள் சரியான விளக்கம் கொடுக்காததால், உணவு பாதுகாப்புத்துறையின் வாட்ஸ் அப் எண்ணுக்கு புகார் தெரிவித்துள்ளார்.புகாரின் அடிப்படையில், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கடையை ஆய்வு செய்தனர். உணவு பாதுகாப்பு சட்டத்தின் படி, முறையாக உணவு பராமரிக்காமல் இருந்ததாக கூறி, சம்மந்தப்பட்ட கடைக்கு நோட்டீஸ் அளித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X