பொது செய்தி

தமிழ்நாடு

மழைநீர் சூழ்ந்த தொட்டி; 'பாடம்' கற்காத மாநகராட்சி

Added : நவ 07, 2021
Share
Advertisement
திருப்பூர்:கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் மண்ணில் புதைந்த சம்பவத்துக்கு பின்னும், மாநகராட்சி 'பாடம்' கற்கவில்லை. இந்த இடத்துக்கு அருகே மேல்நிலைத்தொட்டி, மழைநீர் சூழ்ந்து காணப் படுகிறது.திருப்பூர் மாநகராட்சி பகுதியில், 'அம்ரூத்' திட்டத்தில், 250 கோடி ரூபாய் மதிப்பில், 4வது குடிநீர் திட்டப்பணி கடந்த 2015-16ம் நிதியாண்டில் துவங்கியது.இதற்காக மாநகராட்சி பகுதியில், 27
 மழைநீர் சூழ்ந்த தொட்டி; 'பாடம்' கற்காத மாநகராட்சி

திருப்பூர்:கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் மண்ணில் புதைந்த சம்பவத்துக்கு பின்னும், மாநகராட்சி 'பாடம்' கற்கவில்லை. இந்த இடத்துக்கு அருகே மேல்நிலைத்தொட்டி, மழைநீர் சூழ்ந்து காணப் படுகிறது.திருப்பூர் மாநகராட்சி பகுதியில், 'அம்ரூத்' திட்டத்தில், 250 கோடி ரூபாய் மதிப்பில், 4வது குடிநீர் திட்டப்பணி கடந்த 2015-16ம் நிதியாண்டில் துவங்கியது.இதற்காக மாநகராட்சி பகுதியில், 27 இடங்களில் மேல்நிலை மற்றும் நிலமட்ட தொட்டிகள் கட்டப்பட்டுள்ளன. பிரதான குழாய் மற்றும் வினியோக குழாய்கள் பதிக்கும் பணி பெருமளவு நிறைவடைந்துள்ளது.இத்திட்டத்தில் ஆண்டி பாளையம் குளம் எதிரேயுள்ள இடத்தில், 20 லட்சம் லிட்டர் கொள்ள ளவு கொண்ட மேல்நிலைத்தொட்டி கட்டப்பட்டுள்ளது.தொட்டி அமைந்துள்ள வளாகம் அருகே கட்டப்பட்ட கழிவுநீர் சுத்திகரிப்பு மையத் தொட்டி ஒன்றும், அதனருகே அமைந்த 'டோனர் அறையும்' சில நாள் முன், பெய்த மழையால் மண்ணில்புதைந்தது. இதனால், அந்த கட்டடம் இடித்து அப்புறப்படுத்தப்பட்டது. அந்த இடத்தில் தேங்கிய மழை நீர் உறிஞ்சி அப்புறப்படுத்தப்பட்டது.இருப்பினும் அதே பகுதியில் மேல்நிலை தொட்டி வளாகத்தில் தேங்கி நிற்கும் மழைநீர் அகற்ற எந்த நடவடிக்கையும் இது வரை எடுக்கப்படவில்லை.கடந்த பத்து நாளாக, மழைநீர், குட்டைபோல் தேங்கி நிற்கிறது.இதனால், அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன், தேங்கி நிற்கும் நீர் அகற்றவும், இனி மேல் அங்கு தண்ணீர் தேங்காமலும், மாநகராட்சி கமிஷனர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X