சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சென்னை விமான நிலையத்தில் வேலை : நண்பர் மீது வழக்கு

Added : நவ 07, 2021
Share
Advertisement
தேனி--சென்னை விமான நிலையத்தில் வேலை வாங்கி தருவதாக தேனியை சேர்ந்த மூன்று பேரிடம் ரூ.19.70 லட்சம் மோசடி செய்த திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்தவர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிந்தனர்.உத்தமபாளையம் மேலப்பட்டியைச் சேர்ந்தவர் ஜீவா 27. இவரது சித்தப்பா மணி 48. அவரது நண்பர் கண்ணன் 52. இவர் திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராமை சேர்ந்தவர். ரூ.10 லட்சம் கொடுத்தால் சென்னை

தேனி--சென்னை விமான நிலையத்தில் வேலை வாங்கி தருவதாக தேனியை சேர்ந்த மூன்று பேரிடம் ரூ.19.70 லட்சம் மோசடி செய்த திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்தவர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிந்தனர்.

உத்தமபாளையம் மேலப்பட்டியைச் சேர்ந்தவர் ஜீவா 27. இவரது சித்தப்பா மணி 48. அவரது நண்பர் கண்ணன் 52. இவர் திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராமை சேர்ந்தவர். ரூ.10 லட்சம் கொடுத்தால் சென்னை விமான நிலையத்தில் வேலை வாங்கி தருவதாக கண்ணன் கூறினார்.மணி தனது மகன் கார்த்திக், ஜீவா, அவரின் நண்பர் மதன்குமாருக்கு வேலை கோரினார். கண்ணன் வங்கி கணக்கில் பல தவணையாக ரூ.18.70 லட்சம் செலுத்தப்பட்டது. ரூ.1 லட்சம் நேரடியாக வழங்கப்பட்டது. ஆனால் கண்ணன் வேலை வாங்கி கொடுக்காமல் மோசடி செய்தார்.

மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கண்ணன் மீது மோசடி வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.* பெரியகுளம் சருத்துப்பட்டி கிழக்குத்தெரு பெயிண்டர் ஜீவா 35. இவரிடம் மதுரை விமான நிலையத்தில் ஸ்டோர் கீப்பர் பணி வாங்கி தருவதாக பேசிய மர்ம நபர் ரூ.2350ஐ வங்கி கணக்கு மூலம் பெற்றார். அதன்பின் இன்னொரு அலைபேசி எண்ணில் பேசிய நபர் டில்லி விமான நிலையத்தில் வேலை கிடைத்ததாக கூறி ரூ.20,500 மோசடி செய்தார். தேனி சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிந்து மோசடி நபர்களை தேடுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X