பொது செய்தி

தமிழ்நாடு

கன மழையிலும் துாய்மை பணி

Updated : நவ 08, 2021 | Added : நவ 07, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
சென்னை: மழையிலும் வீடுதோறும் குப்பை சேகரித்த துாய்மை பணியாளர்களின் சேவை, நெகிழச் செய்தது.சென்னையில் நேற்று முன்தினம் இரவு முதல் கன மழை பெய்தது. தெருக்கள், வடிகால்கள் மற்றும் கால்வாய்களில் மழைநீர் வடிய, குப்பை மற்றும் மரக்கிளைகள் தடையாக இருந்தன. இவற்றை துாய்மை பணியில் ஈடுபட்டு வரும் தனியார் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள், மழையையும் பொருட்படுத்தாமல் அகற்றி, தங்களின்
 கன மழையிலும் துாய்மை பணி

சென்னை: மழையிலும் வீடுதோறும் குப்பை சேகரித்த துாய்மை பணியாளர்களின் சேவை, நெகிழச் செய்தது.

சென்னையில் நேற்று முன்தினம் இரவு முதல் கன மழை பெய்தது. தெருக்கள், வடிகால்கள் மற்றும் கால்வாய்களில் மழைநீர் வடிய, குப்பை மற்றும் மரக்கிளைகள் தடையாக இருந்தன. இவற்றை துாய்மை பணியில் ஈடுபட்டு வரும் தனியார் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள், மழையையும் பொருட்படுத்தாமல் அகற்றி, தங்களின் கடமையை நிறைவேற்றினர்.

தெருக்களில் மழை நீர் தேங்கியதால், 'பேட்டரி' வாகனங்களில் குப்பை சேகரிப்பதில் சிரமம் ஏற்பட்டது. இதை உணர்ந்த துாய்மை ஊழியர்கள், கழிவு நீருடன் கலந்து தெருக்களில் தேங்கிய மழைநீரில் நடந்து சென்று, வீடுகளில் குப்பை சேகரித்தனர்.

சில இடங்களில், இதர துறை ஊழியர்களுடன் இணைந்து, வெள்ளம் வடிய உதவினர்.மழையில் நனைந்தபடியே பணி செய்த துாய்மை ஊழியர்களை, பொதுமக்கள் மனதார பாராட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Samathuvan - chennai,இந்தியா
09-நவ-202120:12:30 IST Report Abuse
Samathuvan I thought suddenly they have changed their dress from maroon to multi. Please show their pictures in front shot sothat we will decide.
Rate this:
Cancel
Tiruchendurai Balasubramanian - Chennai,இந்தியா
09-நவ-202117:32:29 IST Report Abuse
Tiruchendurai Balasubramanian பூச்செண்டு பல உங்களுக்கு உரித்தாகுக.
Rate this:
Cancel
chennai sivakumar - chennai,இந்தியா
08-நவ-202118:20:01 IST Report Abuse
chennai sivakumar கண்டிப்பாக பாராட்ட படவேண்டியவர்கள். ஒவ்வொரு மழை நீர் வடிகால் வழிகளையும் திறந்து, மழை நீர் விரைந்து செல்ல பணி ஆற்றுபவர்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X