பொது செய்தி

தமிழ்நாடு

பெயர்ந்த தளம்

Added : நவ 08, 2021
Share
Advertisement
திருப்பூர் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் உயர்மட்டப் பாலங்கள் அமைக்கப்பட்டன. காமராஜ் ரோடு, பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் நெரிசலைத் தவிர்த்து வாகனங்கள் செல்லும் வகையில், நெடுஞ்சாலைத் துறையின் சார்பில் பாலம் கட்டப்பட்டுள்ளது. பெருமாள் கோவில் அருகே துவங்கும் இந்த பாலம் காட்டன் மார்க்கெட் வளாகம் அருகே முடியும் வகையில் உள்ளது. தினமும் பல்லாயிரம்
 பெயர்ந்த தளம்

திருப்பூர் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் உயர்மட்டப் பாலங்கள் அமைக்கப்பட்டன. காமராஜ் ரோடு, பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் நெரிசலைத் தவிர்த்து வாகனங்கள் செல்லும் வகையில், நெடுஞ்சாலைத் துறையின் சார்பில் பாலம் கட்டப்பட்டுள்ளது. பெருமாள் கோவில் அருகே துவங்கும் இந்த பாலம் காட்டன் மார்க்கெட் வளாகம் அருகே முடியும் வகையில் உள்ளது. தினமும் பல்லாயிரம் சரக்கு வாகனங்கள், கார், பைக் உள்ளிட்ட தனியார் வாகனங்கள் இப்பாலம் வழியாகச் சென்று வருகிறது. இதில் ெபருமாள் கோவில் அருகிலிருந்து பாலம் இறங்கும் இடத்தில் பாலம் மீது உள்ள கான்கிரீட் தளம் பெயர்ந்து அதில் உள்ள இரும்பு கம்பிகள் வெளியே நீட்டிக் கொண்டிருக்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அச்சத்துடன் இந்த இடத்தைக் கடந்து செல்லும் நிலை உள்ளது. வாகனங்கள் பழுது ஏற்படுவதும், இந்த இடத்தைக் கடக்கும் போது, தடுமாறும் வாகன ஓட்டிகளால் சிறு விபத்துகளும் ஏற்படுவது சகஜமாக உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X