பொது செய்தி

தமிழ்நாடு

உழவர் சந்தையில் தக்காளி கிலோ ரூ.50

Added : நவ 08, 2021
Share
Advertisement
திருப்பூர்:வரத்து குறைவால், தெற்கு உழவர் சந்தையில் ஒரு கிலோ தக்காளி, 50 ரூபாய்க்கு நேற்று விற்கப்பட்டது.திருப்பூர் பல்லடம் ரோட்டில் உள்ள தெற்கு உழவர் சந்தைக்கு பொங்கலுார், பல்லடம், கணபதி பாளையம், சம்மந்தம்பாளையம், கொடுவாய், மாதப்பூர் உள்ளிட்ட பகுதியில் இருந்து, 25 டன் தக்காளி விற்பனைக்கு வரும்.கடந்த பத்து நாட்களாக விட்டுவிட்டு பெய்து வரும் மழையால், தக்காளி வரத்து

திருப்பூர்:வரத்து குறைவால், தெற்கு உழவர் சந்தையில் ஒரு கிலோ தக்காளி, 50 ரூபாய்க்கு நேற்று விற்கப்பட்டது.திருப்பூர் பல்லடம் ரோட்டில் உள்ள தெற்கு உழவர் சந்தைக்கு பொங்கலுார், பல்லடம், கணபதி பாளையம், சம்மந்தம்பாளையம், கொடுவாய், மாதப்பூர் உள்ளிட்ட பகுதியில் இருந்து, 25 டன் தக்காளி விற்பனைக்கு வரும்.கடந்த பத்து நாட்களாக விட்டுவிட்டு பெய்து வரும் மழையால், தக்காளி வரத்து வெகுவாக குறைந்துள்ளது. கடந்த வாரம், பத்து முதல், 15 டன் தக்காளி மட்டுமே வந்ததால், ஒரு கிலோ தக்காளி, 40 ரூபாய்க்கு விற்றது. தீபாவளியை முன்னிட்டு ஒரு கிலோ தக்காளி, 45 ரூபாய்க்கு விற்றது.இரு தினங்களாக அதிகாலை, நள்ளிரவில் மழை பெய்து வருவதால், வரத்து மேலும் குறைந்து நேற்று, ஆறு டன் தக்காளி மட்டுமே வந்தது. இதனால், கிேலாவுக்கு ஐந்து ரூபாய் விலை உயர்ந்து ஒரு கிலோ, 50 ரூபாய்க்குவிற்றது. 14 கிலோ கொண்ட பெட்டி, மொத்த விலையில், 600 ரூபாய் விற்றது. 28 கிலோ பெரிய பெட்டி, 1,200 ரூபாயாக இருந்தது.உழவர் சந்தை அலுவலர்கள் கூறுகையில், 'மூன்றில் ஒரு பங்கு தக்காளி மட்டுமே வருகிறது. வரத்து பத்து டன்னுக்கும் கீழ் குறைந்துள்ளதால், அதற்கேற்ப விலை நிர்ணயிக்க வேண்டியுள்ளது.நடப்பு வாரத்தில் தொடர் முகூர்த்தம் இருப்பதால், பலரும் தக்காளி வாங்க சந்தைக்கு வருகின்றனர். விற்க தக்காளி இல்லாத சூழலால் விலை உயர்ந்துள்ளது. சின்னரகம், 40 முதல், 42 ரூபாய். நடுத்தரம், 46 முதல், 48 ரூபாய். முதல் தரம் (பெரியது), 50 ரூபாய்க்கு விற்றது,' என்றனர்.பொங்கலுார்: மாவட்டத்தில், ஆடிப்பட்டத்தில் விவசாயிகள் பலர், தக்காளி நடவு செய்தனர். நடவு சீசனின் போது தக்காளிக்கு போதிய விலை கிடைக்கவில்லை. ஒரு டிப்பர்(14 கிலோ) நுாறு ரூபாய்க்கு விற்றது. தக்காளியில் நஷ்டம் ஏற்பட்ட போதிலும் அறுவடைக்கு வரும் போது மழை காலம் துவங்கி விடும். அப்போது தக்காளிக்கு நல்ல விலை கிடைக்கும் என்று விவசாயிகள் ஆடிப்பட்ட சாகுபடியை மேற்கொண்டனர். தற்போது, ஆடிப்பட்ட தக்காளி அறுவடை துவங்கிய நிலையில் இடைவிடாது மழை பெய்து வருகிறது. வயலில் தண்ணீர் தேங்குவதால் பெரும்பகுதி தக்காளிஅழுகி வீணாகி விட்டது. மேலும், பூக்கள் உதிர்ந்து, இலைகள் கருகி விட்டன.காய்ப்புத் திறனை செடிகள் இழந்துள்ளதால் இனி மகசூல் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. விளைச்சல் பாதிப்பால் சந்தைக்கு வரும் தக்காளியின் அளவு வெகுவாக குறைந்துவிட்டது. தற்போது, சந்தையில் ஒரு டிப்பர் தக்காளி, 700 ரூபாய்க்கு விலை போகிறது.விவசாயிகள் கூறுகையில், ''நன்றாக காய்த்த போது விலை இல்லை. தற்போது நல்ல விலைக்கு விற்பனையாகிறது. ஆனால், எங்களிடம் தக்காளி விளைச்சல் இல்லை. இதனால், முதலீட்டை கூட எடுக்க முடியவில்லை. இனி செடிகளை உழவு ஓட்டி அழிப்பதைத் தவிர வேறு வழியில்லை'' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X