பொது செய்தி

தமிழ்நாடு

கனமழை எதிரொலி: 'குர்லா' ரயில் தாமதம்

Added : நவ 08, 2021
Share
Advertisement
திருப்பூர்:தினமும் காலை, 8:50க்கு கோவையில் இருந்து மும்பைக்கு குர்லா எக்ஸ்பிரஸ் இயக்கப்படுகிறது. திருப்பூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, ஓசூரில் நின்று, பெங்களூரு சென்றடையும் ரயில், மறுநாள் மதியம், 1:45க்கு மும்பை சென்று சேரும். சேலம் வழியாக மும்பைக்கு இயக்கப்படும் ஒரே தினசரி ரயில் 'குர்லா' மட்டும்தான் என்பதால், எப்போதும் டிக்கெட் முன்பதிவு சுறுசுறுப்பாக

திருப்பூர்:தினமும் காலை, 8:50க்கு கோவையில் இருந்து மும்பைக்கு குர்லா எக்ஸ்பிரஸ் இயக்கப்படுகிறது. திருப்பூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, ஓசூரில் நின்று, பெங்களூரு சென்றடையும் ரயில், மறுநாள் மதியம், 1:45க்கு மும்பை சென்று சேரும். சேலம் வழியாக மும்பைக்கு இயக்கப்படும் ஒரே தினசரி ரயில் 'குர்லா' மட்டும்தான் என்பதால், எப்போதும் டிக்கெட் முன்பதிவு சுறுசுறுப்பாக இருக்கும்.தீபாவளியை முன்னிட்டு இந்த ரயிலில் பயணிக்க, பலரும் முன்பதிவு செய்திருந்தனர்.

ஐம்பதுக்கும் அதிகமானோர் காத்திருப்போர் பட்டியலில் இருந்தனர். கடந்த, 1ம் தேதி முதல் ஒரு வாரமாக இந்த ரயில் திருப்பூர், கோவைக்கு இரண்டு முதல் ஐந்து மணி நேரம் தாமதமாக வருகிறது. அதிகாலையில் வந்து காலை, 8:50க்கு புறப்பட வேண்டிய ரயில், மதியத்துக்கு பின் தான் கோவையில் இருந்தே புறப்படுகிறது. இதனால், டிக்கெட் முன்பதிவு செய்து ரயிலுக்காக பிளாட்பார்மில் காத்திருக்கும் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், 'வட மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக ஐந்து மணி நேரம் ரயில் தாமதமாக வந்தது. அடுத்த இரு நாட்கள் இதே நிலை ஏற்பட்டதால், இணை ரயில் நேரத்துக்கு வந்து சேர முடியவில்லை. தாமதம் ஏற்பட்டு விட்டது. டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கு ரயில் தாமதம் குறித்து முன்கூட்டியே தெரிவிக்கப்படுகிறது,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X