பொது செய்தி

தமிழ்நாடு

காரில் சிக்கிய சான்றிதழ்கள் உரியவரிடம் ஒப்படைப்பு

Added : நவ 08, 2021
Share
Advertisement
திருப்பூர்;விவசாயிகள் உள்ளிருப்பு போராட்டம் பாதுகாப்பு பணிக்காக, காமநாயக்கன்பாளையம் இன்ஸ்பெக்டர் ரவி, அவிநாசிபாளையம் போலீஸ் எஸ்.ஐ., முருகன் உள்ளிட்ட போலீசார், காங்கயத்தில் முகாமிட்டனர்.அங்கு ஈரோடு மெயின் ரோட்டில் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது, அவ்வழியாக வந்த ஒரு காரில், முன்புற அடிப்பகுதியில் பை ஒன்று சிக்கியிருந்தது.அந்த காரை நிறுத்தி போலீசார் சோதனை செய்த போது,
 காரில் சிக்கிய சான்றிதழ்கள் உரியவரிடம் ஒப்படைப்பு

திருப்பூர்;விவசாயிகள் உள்ளிருப்பு போராட்டம் பாதுகாப்பு பணிக்காக, காமநாயக்கன்பாளையம் இன்ஸ்பெக்டர் ரவி, அவிநாசிபாளையம் போலீஸ் எஸ்.ஐ., முருகன் உள்ளிட்ட போலீசார், காங்கயத்தில் முகாமிட்டனர்.அங்கு ஈரோடு மெயின் ரோட்டில் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது, அவ்வழியாக வந்த ஒரு காரில், முன்புற அடிப்பகுதியில் பை ஒன்று சிக்கியிருந்தது.அந்த காரை நிறுத்தி போலீசார் சோதனை செய்த போது, அந்த பையில் பள்ளி, கல்லுாரி சான்று, வங்கி காசோலை, புத்தகம், 'பாஸ்போர்ட்' ஆகியவை இருந்தது. ரோட்டில் கிடந்த பை, காரில் சிக்கியது தெரிந்தது.அந்த சான்றிதழ்கள், சென்னை அம்பத்துாரை சேர்ந்த அமீர்கான் என்பவருடையது தெரிந்தது. அவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, நேரில் வரவழைத்து விசாரித்து, போலீசார் ஒப்படைத்தனர். இந்த செயலை, போலீஸ் உயரதிகாரிகள் பாராட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X