பொது செய்தி

இந்தியா

'சைகோவ் - டி' 1 கோடி 'டோஸ்' 'ஆர்டர்' செய்தது மத்திய அரசு

Updated : நவ 08, 2021 | Added : நவ 08, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
புதுடில்லி-குழந்தைகளுக்கான 'சைகோவ் - டி' தடுப்பூசியின் ஒரு கோடி 'டோஸ்'களை வாங்க, 'சைடஸ் கேடிலா' நிறுவனத்திடம் மத்திய அரசு 'ஆர்டர்' செய்துள்ளது.18 வயதுநம் நாட்டில் கொரோனா வைரசுக்கான தடுப்பூசியை மக்களுக்கு செலுத்தும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. அதன்படி, 18 வயதுக்கு மேற்பட்ட மக்களுக்கு மட்டும் இரண்டு டோஸ்களாக தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு

புதுடில்லி-குழந்தைகளுக்கான 'சைகோவ் - டி' தடுப்பூசியின் ஒரு கோடி 'டோஸ்'களை வாங்க, 'சைடஸ் கேடிலா' நிறுவனத்திடம் மத்திய அரசு 'ஆர்டர்' செய்துள்ளது.



latest tamil news


18 வயதுநம் நாட்டில் கொரோனா வைரசுக்கான தடுப்பூசியை மக்களுக்கு செலுத்தும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. அதன்படி, 18 வயதுக்கு மேற்பட்ட மக்களுக்கு மட்டும் இரண்டு டோஸ்களாக தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.இதற்கிடையே, 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினருக்காக, சைகோவ் - டி என்ற தடுப்பூசியை, குஜராத்தின் ஆமதாபாதை தலைமையிடமாக வைத்து இயங்கும் சைடஸ் கேடிலா என்ற நிறுவனம் தயாரித்து உள்ளது.

ஊசி இல்லாமல், 'இன்ஜெக்டர்' எனப்படும் சிறப்பு கருவி வாயிலாக செலுத்தப்பட வேண்டிய இந்த தடுப்பூசியை அவசர காலத்தில் பயன்படுத்துவதற்கு, டி.சி.ஜி.ஐ., எனப்படும் இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு சமீபத்தில் ஒப்புதல் அளித்தது.நம் நாட்டில், 12 வயதுக்கு மேற்பட்டோருக்கு செலுத்த அனுமதி பெற்றுள்ள முதல் தடுப்பூசி இது.


latest tamil news


இந்நிலையில் இந்த தடுப்பூசியை வாங்க, மத்திய அரசு ஆர்டர் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.358 ரூபாய்இது குறித்து மூத்த அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது:சைகோவ் - டி தடுப்பூசியின் ஒரு கோடி டோஸ்களை வாங்க, சைடஸ் கேடிலா நிறுவனத்திடம் மத்திய அரசு ஆர்டர் செய்துள்ளது. வரி இல்லாமல் 358 ரூபாய் என்ற விலைக்கு ஒரு டோஸ் வாங்கப்படுகிறது. மருந்தை செலுத்த பயன்படுத்தப்படும் சிறப்பு இன்ஜெக்டருடன் சேர்த்து இந்த விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
08-நவ-202110:24:14 IST Report Abuse
VENKATASUBRAMANIAN ஏன் கட்டுமரம் குடும்பம் செய்யலாமே. ஊரை அடித்து கொள்ளை செய்தவர்கள்.
Rate this:
Cancel
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
08-நவ-202108:23:07 IST Report Abuse
VENKATASUBRAMANIAN ஏன் கட்டுமரம் குடும்பம் வாங்கி கொடுக்க வேண்டுபியதுதானே. ஊரை அடித்து கொள்ளை அடிக்கிரர்கள்.
Rate this:
Cancel
Palanivelu Kandasamy - Thiruvananthapuram (Trivandrum),இந்தியா
08-நவ-202107:36:51 IST Report Abuse
Palanivelu Kandasamy ரொம்பவும் விளம்பரம் செய்யப்பட D2G ஓரல் பவுடர் மருந்து என்ன ஆனது?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X