குப்பையோடு குப்பையாக மனிதர்!| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

குப்பையோடு குப்பையாக மனிதர்!

Added : நவ 08, 2021
Share
பல்லடம்:பண்டிகை கோலாகலத்தில் பலரும் திளைத்திருக்க, நுாற்றுக்கணக்கான வாகனங்கள் வந்து செல்லும், பல்லடம் - - திருப்பூர் நெடுஞ்சாலை அருள்புரம் அருகே, மனநலம் பாதித்த நபர் ஒருவர், நீண்ட நாட்களாக ரோட்டோரத்தில் படுத்து கிடக்கிறார்.கிழிந்த, அழுக்குப் படிந்த டிராயர், சட்டையுடன் 'மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தபடியும் கிடக்கிறார் அந்த நபர். சாப்பிட்டாரா அல்லது மயங்கிய
 குப்பையோடு குப்பையாக மனிதர்!

பல்லடம்:பண்டிகை கோலாகலத்தில் பலரும் திளைத்திருக்க, நுாற்றுக்கணக்கான வாகனங்கள் வந்து செல்லும், பல்லடம் - - திருப்பூர் நெடுஞ்சாலை அருள்புரம் அருகே, மனநலம் பாதித்த நபர் ஒருவர், நீண்ட நாட்களாக ரோட்டோரத்தில் படுத்து கிடக்கிறார்.கிழிந்த, அழுக்குப் படிந்த டிராயர், சட்டையுடன் 'மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தபடியும் கிடக்கிறார் அந்த நபர். சாப்பிட்டாரா அல்லது மயங்கிய நிலையில் உள்ளாரா என்பதும் தெரியாமல், குப்பைகளுக்கு மத்தியில் கிடக்கிறார்.எதிரில்தான், ஊராட்சி அலுவலகம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்டவை உள்ளன. பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவ்வப்போது உணவு வழங்குவதாக அப்பகுதியினர் கூறுகின்றனர்.அரசு அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் என, ஏராளமானோர் இவ்வழியாக தினசரி வந்து செல்கின்றனர். இவரை பாதுகாப்பான இடத்தில் சேர்க்க யாரும் முன்வரவில்லை என்பது வேதனை அளிக்கிறது. அவர் மீது மனிதாபிமானம் காட்டி, அவருக்கு அடைக்கலம் அளிக்க வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X