சிறப்பு பகுதிகள்

அக்கம் பக்கம்

எல்லாம் ஒரு விளம்பரம் தான்...!

Updated : நவ 08, 2021 | Added : நவ 08, 2021
Share
Advertisement
'இவ்வளவு காலம் எளிமையாக இருந்த மம்தாவும், இப்போது விளம்பர மோகத்துக்கு அடிமையாகி விட்டார்' என, கிசுகிசுக்கின்றனர், மேற்கு வங்க மாநில அரசியல்வாதிகள்.மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜியின் எளிமையைப் பற்றி, அவரது கட்சியினர் எப்போதும் பெருமிதத்துடன் பேசுவது வழக்கம். சாதாரண செருப்பு, காட்டன் புடவை தான் அவரது அடையாளம். ஆனால்
அக்கம் பக்கம்

'இவ்வளவு காலம் எளிமையாக இருந்த மம்தாவும், இப்போது விளம்பர மோகத்துக்கு அடிமையாகி விட்டார்' என, கிசுகிசுக்கின்றனர், மேற்கு வங்க மாநில அரசியல்வாதிகள்.மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜியின் எளிமையைப் பற்றி, அவரது கட்சியினர் எப்போதும் பெருமிதத்துடன் பேசுவது வழக்கம்.

சாதாரண செருப்பு, காட்டன் புடவை தான் அவரது அடையாளம். ஆனால் மற்றவர்களைப் பார்த்து, மெல்ல மெல்ல அவரிடமும் இப்போது விளம்பர மோகம் ஏற்பட்டு விட்டது. மற்றவர்கள் தன்னைப் பற்றி புகழ்ந்து பேச வேண்டும் என்றும், தன்னைப் பற்றிய செய்திகள் அதிகமாக வெளியாக வேண்டும் என்றும் அவர் கருதுகிறார். சமீப காலமாக மம்தா பானர்ஜி, வெளியூர் சென்றால், ஏராளமான கோப்புகளும் அவருடன் செல்கின்றன. விமானத்தில் சென்றாலும், இந்த கோப்புகளை எடுத்துச் செல்ல அவர் தவறுவது இல்லை. 'கோப்புகள் தேங்குவது எங்கள் தலைவிக்கு பிடிக்காது. அதனால் தான் எங்கு சென்றாலும் அவற்றை எடுத்துச் செல்கிறார்' என்கின்றனர், அவரது கட்சியினர்.

'அடுத்த லோக்சபா தேர்தலுக்கு மம்தா தான், எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளர் என்ற பிரசாரத்தை, அவரது கட்சியினர் கட்டமைக்கின்றனர். அதற்காகத் தான் இந்த கோப்பு விவகாரங்களை இப்போது கையில் எடுத்துள்ளனர்' என்கின்றனர், மேற்கு வங்க அரசியல்வாதிகள்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X