சிறப்பு பகுதிகள்

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

Added : நவ 08, 2021
Share
Advertisement
ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ பேட்டி: கேரள அரசு தொடக்கத்திலிருந்தே முல்லை பெரியாறு அணையை உடைக்க வேண்டும் என துடித்துக் கொண்டிருக்கிறது. இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும், அணை வலுவாக இருக்கும். கேரள அரசின் திட்டம் எடுபடாது.கரிகாலன் கட்டிய கல்லணை அளவுக்கு, முல்லை பெரியாறு அணையை உயர்த்தி பேசுகிறீர்களே... எனினும், அணைகளுக்கு என உள்ள குறைந்தபட்ச ஆயுளை கணக்கில் எடுத்துக்
 பேச்சு, பேட்டி, அறிக்கை

ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ பேட்டி: கேரள அரசு தொடக்கத்திலிருந்தே முல்லை பெரியாறு அணையை உடைக்க வேண்டும் என துடித்துக் கொண்டிருக்கிறது. இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும், அணை வலுவாக இருக்கும். கேரள அரசின் திட்டம் எடுபடாது.
கரிகாலன் கட்டிய கல்லணை அளவுக்கு, முல்லை பெரியாறு அணையை உயர்த்தி பேசுகிறீர்களே... எனினும், அணைகளுக்கு என உள்ள குறைந்தபட்ச ஆயுளை கணக்கில் எடுத்துக் கொள்ளத் தான் வேண்டும்!

உழவர் உழைப்பாளர் கட்சித் தலைவர் செல்லமுத்து அறிக்கை: காவிரி ஒப்பந்தம் மற்றும் கச்சத் தீவில் தமிழக உரிமையை பறிகொடுத்தது போல, கேரள அமைச்சர்கள் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட்ட சம்பவம் நடந்துள்ளது.
தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அப்படி இல்லவே இல்லை என்கிறாரே!

மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் செயலர் வாங்கிலி பேட்டி: அங்கீகரிக்கப் பட்ட தகுதியான நிறுவனங்களால் வழங்கப்படும் ஒளிரும் பட்டைகளை, வாகனங்களில் ஒட்டி, போக்குவரத்து அலுவலகத்தில் தகுதிச்சான்றிதழ்களை பெற்று கொள்ளலாம் என, மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆனால், தமிழக அரசு அதிகாரிகள், மத்திய அரசின் உத்தரவை பின்பற்றுவதில்லை.
மதம், தேசியம், ஒரே நாடு விவகாரத்தில் தான் மாறுபட்ட சிந்தனை கொண்டவர்கள் அவர்கள். ஒளிரும் பட்டையிலும் அப்படியா?

திராவிடர் கழகத் தலைவர் வீரமணி அறிக்கை: திராவிட மாடல் ஆட்சி எப்படி இருக்கும் என்பதை உலகுக்கு பிரகடனம் செய்தவர் கருணாநிதி. 'திராவிடர் ஆட்சி' வெறும் காட்சிக்காக அல்ல;- மனித உரிமைக்கானது,- மாட்சிக்குரியது என்பதை உலக வரலாற்றில் பதிய வைத்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.அப்போ அண்ணாதுரை ஆட்சி அப்படியில்லையா... ஈ.வெ.ரா., வழி நடந்த, அ.தி.மு.க., ஆட்சியிலும் இவ்வாறு இல்லையா?

தமிழக பா.ஜ., கலாசார பிரிவின் தலைவர், நடிகை காயத்ரி ரகுராம் பேட்டி: திருவள்ளுவர் கிறிஸ்தவர்; சிதம்பரம் நடராஜரும் கிறிஸ்தவரே என, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறுகிறார். அவரின் பொய்யை கேட்டு இயேசுவே அதிர்ச்சி அடைந்து விடுவார்.
இப்படித் தானே இவர் போன்ற கட்சித் தலைவர்களின் செயல்பாடு உள்ளது. பொய்யை உண்மை என உரக்க சொல்கின்றனர். அதையே அவரது கட்சியினரும் நம்புகின்றனர்!

த.மா.கா., தலைவர் ஜி.கே.வாசன் அறிக்கை: ரயில்வே துறை 53 பிரிவினருக்கு பயண சலுகை வழங்கியதோடு கொரோனா காலத்தில் அனைத்தையும் ரத்து செய்தது. தற்போது கொரோனா நோய் பரவல், பெருமளவு குறைந்துள்ளது. எனவே, சிறப்பு ரயில்களை ரத்து செய்து, வழக்கமான ரயில்களை இயக்க அனுமதிக்க வேண்டும்.

இதுபோன்ற உருப்படியான கோரிக்கைகளை எந்த தமிழக கட்சிகளும் செய்வதில்லை. எல்லாவற்றிலும் அரசியல். எல்லா பார்வையும் அரசியல்.. எப்போது தான் உங்களைப் போல மாறுவரோ?

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X