பொது செய்தி

தமிழ்நாடு

நிரம்பிய நீர்நிலைகள்... ததும்புகிறது மகிழ்ச்சி 'வெள்ளம்!'

Updated : நவ 08, 2021 | Added : நவ 08, 2021
Share
Advertisement
ஆண்டுக்கு, சராசரியாக, 60 செ.மீ.. மட்டுமே மழையளவு கொண்ட, தொழில் நகரான திருப்பூரில், தற்போது பருவமழை பெய்து வருகிறது. அவிநாசி உள்ளிட்ட அதிகளவு விவசாயம் நிலங்கள் உள்ள இடங்களில், இந்த மழையை, வரப்பிரசாதமாக விவசாயிகள் கருதுகின்றன்.இதுவரை நிரம்பாத குளம், குட்டைகள் கூட நிரம்ப துவங்கியுள்ளன. பல ஆண்டு இடைவெளிக்கு பின் சில குளம், குட்டைகள் நிரம்பி ததும்புகின்றன.நிரம்பி வழியும்
 நிரம்பிய நீர்நிலைகள்... ததும்புகிறது மகிழ்ச்சி 'வெள்ளம்!'

ஆண்டுக்கு, சராசரியாக, 60 செ.மீ.. மட்டுமே மழையளவு கொண்ட, தொழில் நகரான திருப்பூரில், தற்போது பருவமழை பெய்து வருகிறது.

அவிநாசி உள்ளிட்ட அதிகளவு விவசாயம் நிலங்கள் உள்ள இடங்களில், இந்த மழையை, வரப்பிரசாதமாக விவசாயிகள் கருதுகின்றன்.இதுவரை நிரம்பாத குளம், குட்டைகள் கூட நிரம்ப துவங்கியுள்ளன. பல ஆண்டு இடைவெளிக்கு பின் சில குளம், குட்டைகள் நிரம்பி ததும்புகின்றன.நிரம்பி வழியும் நீர்நிலைகளை, தங்கள் மொபைல் கேமராவில் படமெடுத்து, சமூக வலைதளங்களில் உலவ விட்டு, மகிழ்ச்சியை பரிமாறி கொள்கின்றனர்,

விவசாயிகளும், பொதுமக்களும். ஆங்காங்கே மரக்கன்று நடுவதையும், பசுமை போர்வை உருவாக்கவும், தன்னார்வ அமைப்பினரும், உள்ளாட்சி அமைப்பினரும் முனைப்புக்காட்டி வருகின்றனர்.ரசாயன உரங்களால் மலடாகி வரும் மண் வளம், ஆயிரம் அடிக்கும் ஆழமாக தோண்டப்பட்டு நிலத்தடி நீரை உறிஞ்சும் 'போர்வெல்' ஆகியவற்றில் இருந்து நிலத்தை காக்க, நீர்வளத்தை மேம்படுத்தியாக வேண்டும் என்பதை மக்கள் உணர்ந்திருக்கின்றனர். மரம் நடுவதும் இயற்கையின் வழி செல்வதும் அவசியம் என்பதையும் ஆழமாக புரிந்து இருக்கின்றனர்.

இருப்பினும், மலை மாவட்டங்கள் போன்று மழை, தொடர்ச்சியாக பெய்வதில்லை. மழைக்காலம் முடித்ததும், மீண்டும் வறட்சி தலைதுாக்கும்; நிரம்பி ததும்பிய நீர்நிலைகள், தரை தட்டும்.மரக்கன்று நடுவது, மழைநீரை சேமிப்பது, பண்ணைக்குட்டை அமைப்பது போன்ற பணிகளின் பலன், முழு அளவில் கிடைத்தால் சிறப்பு. திருப்பூரில் 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டம், மாநிலத்துக்கே முன்னுதாரணமாக திகழ்ந்து வருகிறது.ஆலோசனை வழங்க ஆர்வம்மண் மற்றும் நீர் சார்ந்த ஆராய்ச்சி, ஆலோசனைகளை வழங்கி வரும், மத்திய மண் மற்றும் நீர் வள பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனம், ஊட்டியில் செயல்படுகிறது."தொடர்புடைய துறையினர் உரிய ஏற்பாடுகளை செய்து கொடுத்தால், மண் மற்றும் நீர்வள பாதுகாப்பு குறித்த தொழில்நுட்ப ஆலோசனையை வழங்க தயாராக உள்ளோம்," என்கிறார் அந்த மையத்தின் தலைவர் டாக்டர் கண்ணன்.

அதேபோன்று, எங்கெங்கு, எந்தெந்த மரக்கன்றுகளை நட்டு வளர்க்க வேண்டும் என்ற தொழில் நுட்ப ஆலோசனையை வழங்கும் மத்திய அரசின், மரவியல் அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம், கோவையில் உள்ளது.

பயிர் சாகுபடி சார்ந்த, தொழில் நுட்ப ஆலோசனைகளை வழங்கும் வேளாண் அறிவியல் நிலையம், திருப்பூர் மாவட்டம், பொங்கலுாரில் செயல்படுகிறது.அந்தந்த துறை சார்ந்து, நிபுணத்துவம் பெற்றவர்களின் அனுபவ பகிர்வு மூலம். மழைநீர் அறுவடை துவங்கி, மரம் வளர்ப்பு வரையிலான தொழில்நுட்ப ஆலோசனைகள் கிடைக்கும்பட்சத்தில், பசுமை போர்வையை உருவாக்கும் ஆர்வம், முழு பலனை கொடுக்கும்.இதுதொடர்பான கலந்தாய்வு, கருத்தரங்குகள் தொடர வேண்டும்

- நமது நிருபர் -.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X