பொது செய்தி

தமிழ்நாடு

மாணவர்களுக்கு முத்தடுப்பூசி

Added : நவ 08, 2021
Share
Advertisement
திருப்பூர்;தொற்று பரவல் தணிந்து, இயல்பு திரும்பி வருவதால், மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் கடந்த 1ம் தேதி முதல் செயல்படுகிறது.ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகள் பள்ளிக்கு வர துவங்கியுள்ளனர். இவர்களுக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், ரண ஜன்னி உள்ளிட்டவை பள்ளி மாணவ, மாணவியருக்கு வராமல் தடுக்க அனைத்து

திருப்பூர்;தொற்று பரவல் தணிந்து, இயல்பு திரும்பி வருவதால், மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் கடந்த 1ம் தேதி முதல் செயல்படுகிறது.ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகள் பள்ளிக்கு வர துவங்கியுள்ளனர். இவர்களுக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், ரண ஜன்னி உள்ளிட்டவை பள்ளி மாணவ, மாணவியருக்கு வராமல் தடுக்க அனைத்து மாவட்டங்களில் உள்ள ஐந்து முதல் ஆறு வயதுடையோருக்கு ஒரு பகுதியாகவும், பத்து முதல், 16 வயதுடையோருக்கு மற்றொரு பகுதியாகவும் தடுப்பூசி செலுத்த பொது சுகாதாரத்துறை இயக்குனரகம் அறிவுறுத்தியுள்ளது.திருப்பூர் மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் விபரம் குறித்த பட்டியல் வழங்கப்பட்ட நிலையில், 1.32 லட்சம் தடுப்பூசி மாவட்ட சுகாதாரத்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.இன்று முதல் டிச., 20 வரை பள்ளி குழந்தைகளுக்கு இந்த தடுப்பூசி செலுத்தப்பட உள்ளதாக, சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X