பொது செய்தி

தமிழ்நாடு

சிறப்பு பஸ்களில் கூட்டம் இல்லை

Added : நவ 08, 2021
Share
Advertisement
திருப்பூர்:தீபாவளிக்கு சொந்த ஊர் சென்ற தொழிலாளர் திருப்பூர் திரும்புவதற்காக, நேற்று, சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இருப்பினும், எதிர்பார்த்த கூட்டமில்லை.கடந்த 4ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. பயணிகள் வசதிக்காக, அக்., 30ம் தேதி முதல் சிறப்பு பஸ் இயக்கப்பட்டது. இருப்பினும், பண்டிகைக்கு இரு நாட்கள் முன்புதான்( 2, 3 ம் தேதி) பலரும் சொந்த ஊர் பயணமாகினர்.தீபாவளியை

திருப்பூர்:தீபாவளிக்கு சொந்த ஊர் சென்ற தொழிலாளர் திருப்பூர் திரும்புவதற்காக, நேற்று, சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இருப்பினும், எதிர்பார்த்த கூட்டமில்லை.கடந்த 4ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. பயணிகள் வசதிக்காக, அக்., 30ம் தேதி முதல் சிறப்பு பஸ் இயக்கப்பட்டது. இருப்பினும், பண்டிகைக்கு இரு நாட்கள் முன்புதான்( 2, 3 ம் தேதி) பலரும் சொந்த ஊர் பயணமாகினர்.தீபாவளியை முன்னிட்டு, பஸ் மூலம் மூன்று லட்சம் பேர் வெளியூர் சென்றதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர். பண்டிகை நிறைவு பெற்ற நிலையில், வெளியூர் சென்றவர் மீண்டும் திருப்பூர் திரும்ப வசதியாக நேற்று, 100 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது; ஆனால், கூட்டம் இல்லை.அதிகாரிகள் கூறுகையில், 'எப்போதும் தீபாவளிக்கு ஊருக்கு செல்லும் வேகத்தில் பயணிகள் திரும்புவதில்லை. ஒரு வாரம், பத்து நாட்களுக்கு பின்பே திருப்பூரை திரும்புகின்றனர். இன்று (நேற்று) பலரும் திரும்புவர்; கூட்டமிருக்கும் என எதிர்பார்த்து சிறப்பு பஸ் இயக்கினோம். ஆனால், நேற்று கூட்டம் அவ்வளவாக இல்லை. நடப்பு வாரத்தில் மெல்ல மெல்லத்தான் வருவர்,' என்றனர்.திட்டமிடல் இல்லைபயணிகள் அவதிநெரிசலை தவிர்க்க பண்டிகைக்கு இரு நாட்கள் முன், திருப்பூரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. அதன்படி, தீபாவளிக்கு முதல் இரு நாட்கள் திருச்சி பஸ் கோவில் வழியில் இருந்தும், சேலம் பஸ்கள் புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்தும் இயக்கப்பட்டன. கலெக் ஷன் குறைந்ததால், மறுநாளே சேலம் பஸ்கள் - யுனிவர்சல் தியேட்டர் பஸ் ஸ்டாண்ட், திருச்சி பஸ்கள் - புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து இயக்கப்பட்டது.பண்டிகைக்கு முதல் நாள் திருச்சிக்கு செல்லும் போது கோவில்வழியில் டூவீலரை ஸ்டாண்டில் நிறுத்தி விட்டு, பஸ் ஏறிய, தொழிலாளர்கள் நேற்று புதிய பஸ் ஸ்டாண்டில் பஸ் விட்டு இறங்கி, 15 கி.மீ., பயணித்து கோவில்வழி வந்து வண்டியை எடுத்து விட்டு வீடு திரும்பினர்.போக்குவரத்து போலீசார் - போக்குவரத்து துறையினர் முறையான திட்டமிடல் இல்லாததால், பண்டிகை முடிந்தும் பயணிகள் அவதியுற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X