தமிழ்நாடு

இன்று போல் என்றும் மும்முரம் உழைப்பே உன்னதம்! பின்னலாடை நிறுவனங்கள் மீண்டும் இயக்கம்

Updated : நவ 08, 2021 | Added : நவ 08, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
திருப்பூர்:தீபாவளி விடுமுறைக்கு பின்பு, திருப்பூரில் இன்று முதல் பின்னலாடை நிறுவனங்கள் இயங்கத் துவங்குகின்றன. வெளிமாவட்ட தொழிலாளர் அனைவரும் பணிக்கு உடனடியாக திரும்ப வேண்டும் என்று தொழில்துறையினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.தீபாவளி பண்டிகைக்காக, திருப்பூர் பின்னலாடை தொழிலாளர்களுக்கு, கடந்த 3ம் தேதி முதல் விடுமுறை அளிக்கப்பட்டது. பண்டிகை முடிந்ததையடுத்து, ஆடை
இன்று போல் என்றும் மும்முரம் உழைப்பே உன்னதம்! பின்னலாடை நிறுவனங்கள் மீண்டும் இயக்கம்

திருப்பூர்:தீபாவளி விடுமுறைக்கு பின்பு, திருப்பூரில் இன்று முதல் பின்னலாடை நிறுவனங்கள் இயங்கத் துவங்குகின்றன. வெளிமாவட்ட தொழிலாளர் அனைவரும் பணிக்கு உடனடியாக திரும்ப வேண்டும் என்று தொழில்துறையினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
தீபாவளி பண்டிகைக்காக, திருப்பூர் பின்னலாடை தொழிலாளர்களுக்கு, கடந்த 3ம் தேதி முதல் விடுமுறை அளிக்கப்பட்டது. பண்டிகை முடிந்ததையடுத்து, ஆடை உற்பத்தி, நிட்டிங், டையிங் உட்பட அனைத்துவகை 'ஜாப் ஒர்க்' நிறுவனங்கள் இன்று முதல் மீண்டும் இயக்கத்தை துவக்க உள்ளன.ஆண்டுதோறும் பொங்கல், தீபாவளி பண்டிகைக்கு பத்து முதல் 15 நாட்கள் வரை விடுப்பு எடுப்பதை, பனியன் தொழிலாளர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர்.
கொரோனா முதல் மற்றும் இரண்டாவது அலைகளால், திருப்பூர் பின்னலாடை தொழில்முனைவோரும், தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். தொழிலாளர்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணியில், நிறுவனங்களே முன்வந்து ஈடுபட்டு, மாநிலத்துக்கே முன்னுதாரணமாக விளங்கின. ஏறத்தாழ நுாறு சதவீதம் தொழிலாளருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுவிட்டது.வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து, ஆடை தயாரிப்புக்கு தற்போது ஆர்டர் வருகை அதிகரித்துள்ளது.
நுால் உட்பட மூலப்பொருட்கள் மற்றும் அனைத்து ஜாப் ஒர்க் கட்டணங்களும் உயர்ந்துள்ளன. இதனால், ஆடை உற்பத்தி செலவினமும் அதிகரித்துள்ளது.ஏற்கனவே பெறப்பட்ட ஆர்டர் மீதான ஆடை தயாரிப்பை பூர்த்தி செய்வதும், புதிய ஆர்டர்களை பெறுவதும், பின்னலாடை துறையினருக்கு சவால் நிறைந்ததாக உள்ளது.தொழிலாளர்கள், கடந்த ஆண்டுகள் போன்று, பண்டிகை விடுமுறையை நீட்டித்தால், ஆடை உற்பத்தி கடுமையாக பாதிக்கப்படும்.
ஏற்கனவே பல்வேறு பிரச்னைகள் தொடரும்நிலையில், தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டால், பின்னலாடை துறை பெரும் சரிவை சந்திக்க நேரிடும்உற்பத்தியில் தாமதம் ஏற்பட்டால், அதிக தொகை செலவழித்து, பின்னலாடைகளை விமானங்களில் வெளிநாட்டு வர்த்தகருக்கு அனுப்பும் நிலைக்கு ஏற்றுமதி நிறுவனங்கள் தள்ளப்படும்.தொழிலாளர் அனைவரும், உடனடியாக பணிக்கு திரும்பிவிடவேண்டும் என்பது, பின்னலாடை துறையினரின் எதிர்பார்ப்பு.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
08-நவ-202118:10:09 IST Report Abuse
சம்பத் குமார் 1). உழைப்பே உயர்வு என்பது திருப்பூர் மக்களுக்கு நன்கு அறிந்த விஷயம்.2). பிரதமர் மோடி அவர்களின் textile தொழிலுக்கு RoSCTL scheme( Rebate of state and central taxes and levies) வரும் 2024 வருடம் மார்ச் வரை extend செய்துள்ளதால் அதன் தாக்கம் இந்த தொழிலில் வளர்ச்சி பாதையில் செல்கிறது.3). இந்த தொழில் சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினர் மற்றும் தொழிலாளர்கள் இந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்தி முன்னேற்றம் காண வேண்டும். நன்றி வணக்கம் ஐயா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X