மரங்கள் வெட்ட தடை: கேரள அரசு உத்தரவு

Updated : நவ 08, 2021 | Added : நவ 08, 2021 | கருத்துகள் (11)
Share
Advertisement
கொச்சி-முல்லைப் பெரியாறு அணை அருகே, பேபி அணைக்கு கீழே உள்ள, 15 மரங்களை வெட்டும் உத்தரவை, கேரள அரசு நிறுத்தி வைத்துள்ளது.கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்கு முல்லைப் பெரியாறு அணை அருகே உள்ள, பேபி அணைகளை வலுப்படுத்த, அங்குள்ள மரங்களை வெட்ட வேண்டும் என்பது தமிழகத்தின் நீண்ட கால கோரிக்கை.இந்நிலையில் பேபி அணைக்கு

கொச்சி-முல்லைப் பெரியாறு அணை அருகே, பேபி அணைக்கு கீழே உள்ள, 15 மரங்களை வெட்டும் உத்தரவை, கேரள அரசு நிறுத்தி வைத்துள்ளது.



latest tamil news


கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்கு முல்லைப் பெரியாறு அணை அருகே உள்ள, பேபி அணைகளை வலுப்படுத்த, அங்குள்ள மரங்களை வெட்ட வேண்டும் என்பது தமிழகத்தின் நீண்ட கால கோரிக்கை.

இந்நிலையில் பேபி அணைக்கு கீழே, 15 மரங்களை வெட்ட, கேரள வனத் துறை அனுமதி வழங்கியது. இதற்கு நன்றி தெரிவித்து, தமிழக முதல்வர் ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கடிதம் அனுப்பினார். இது, கேரளாவில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.பேபி அணையை வலுப்படுத்தாமல் முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்ட வேண்டும் என்பது கேரள அரசின் நோக்கம். அதற்கு மாறாக தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று பேபி அணையை வலுப்படுத்த, மரங்கள் வெட்டப்படுவதாக வெளியான செய்தி, கேரள அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.


latest tamil news


இந்நிலையில், கேரள வனத் துறை அமைச்சர் ஏ.கே.சசீந்திரன் செய்தியாளர்களிடம் பேசியதாவது:வழக்கத்திற்கு மாறாக மரங்களை வெட்டுவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வனப் பாதுகாப்பு முதன்மை அதிகாரி தரப்பில் இந்த குளறுபடி நடந்துள்ளது. இது பற்றி, முதல்வர் அலுவலகம், வனம் மற்றும் நீர்ப்பாசன அமைச்சகங்களுக்கு எதுவும் தெரியாது. வனத் துறை அதிகாரிகள் தரப்பில் நிகழ்ந்த இந்த தவறு குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மரங்களை வெட்டுவது தொடர்பான உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.

இது குறித்து கேரள பா.ஜ., தலைவர் கே. சுரேந்திரன் கூறியதாவது:முதல்வருக்கும், அமைச்சருக்கும் தெரியாமல் இந்த உத்தரவு பிறப்பித்திருக்க முடியாது. இருவரும், அதிகாரிகளை பலிகடாவாக்கி, மக்களை முட்டாளாக்கி உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RAJAN -  ( Posted via: Dinamalar Android App )
08-நவ-202115:19:50 IST Report Abuse
RAJAN அவசப்பட்டு நன்றி கடிதம் எழுதி செய்திச் சேனல்கள் மணிக்கு ஒரு தடவை வாய் வலிக்க அதை பெரியதாக விளம்பரப்படுத்தி இப்போது வட போச்சே கதையாகி விட்டது. ஆனால், இந்தச் செய்தியை செய்திச் சேனல்கள் வாசிக்காதது ஏனோ?
Rate this:
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
08-நவ-202114:23:01 IST Report Abuse
மலரின் மகள் கடிதம் எழுதாமல் போனில் பேசியிருக்கலாமோ? சிலவற்றை விளம்பரப்படுத்தாமல் அமைதியாக காரியத்தை செய்யவேண்டும் என்பது சாணக்கியத்தனம் என்று புரிந்து கொள்ளவேண்டும் என்று அறிந்து கொள்ளவேண்டும். என்ன செய்ய? புள்ளி வைக்கவேண்டிய இடங்களிலும் நேரத்திலும் கமா போட்டுக்கொண்டே செல்கிறோம். எதோ எழுதுகிறோம் பிரயோசனமில்லாமல் என்று சொல்லிக் கொள்ளவேண்டியதுதான்.
Rate this:
Cancel
Kumar - Madurai,இந்தியா
08-நவ-202112:55:56 IST Report Abuse
Kumar ஏற்கனவே ஒரு கூட்டம் இவர்களை பிச்சைகாரர்கள் என்றார்கள். இவர்கள் கூட அடிமை என்று நினைத்து விட்டார்களோ?ஐந்து வருடத்தில் கேரளா புதிய அணை கட்டி விடுவார்கள். வாழ்க வளமுடன்.வாழ்க வையகம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X