பொது செய்தி

தமிழ்நாடு

'இல்லம் தேடி கல்வி' திட்டம்: நாட்டுப்புற கலைஞர்கள் அசத்தல்

Updated : நவ 08, 2021 | Added : நவ 08, 2021
Share
Advertisement
ஊட்டி:நீலகிரியில், 1,518 கிராமங்களில் 'இல்லம் தேடி கல்வி' திட்டம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.ஊட்டியில், பள்ளி கல்வித்துறை சார்பில் 'இல்லம் தேடி கல்வி' திட்டம் மாவட்ட அளவில் பயிற்சி முகாம், ஊட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.கலெக்டர் கீர்த்தி பிரியதர்ஷினி(பொ) பேசுகையில்,''மாநிலம் முழுவதும் கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக, பள்ளிகள்
 'இல்லம் தேடி கல்வி' திட்டம்: நாட்டுப்புற கலைஞர்கள் அசத்தல்

ஊட்டி:நீலகிரியில், 1,518 கிராமங்களில் 'இல்லம் தேடி கல்வி' திட்டம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

ஊட்டியில், பள்ளி கல்வித்துறை சார்பில் 'இல்லம் தேடி கல்வி' திட்டம் மாவட்ட அளவில் பயிற்சி முகாம், ஊட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.கலெக்டர் கீர்த்தி பிரியதர்ஷினி(பொ) பேசுகையில்,''மாநிலம் முழுவதும் கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக, பள்ளிகள் மூடப்பட்டதால், 1ம் வகுப்பு முதல் 8 ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் கற்றல் இடைவெளி மற்றும் இழப்புகளை ஈடுசெய்யவதற்காக, தன்னார்வலர்களை கொண்டு தினசரி கற்றல் செயல்பாடுகளை மேற்கொண்டு மாணவர்கள் எளிதில் பயன்பெறும் வகையில் திட்டம் அமைந்தது.

நீலகிரியில் இத்திட்டத்தினை செயல்படுத்துவதற்காக, மாவட்ட அளவில், 1,518 கிராமங்கள் கண்டறியப்பட்டு, கடந்த, 10 நாட்களாக 'இல்லம் தேடி கல்வி' திட்டத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, நாட்டுப்புற கலைஞர்களின் உதவியுடன் அனைத்து கிராமங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நசருதீன், மாவட்ட கல்வி அலுவலர் விஜய்குமார், அய்யப்பன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X