கூடுதல் பஸ்கள் இல்லை: பயணிகள் அவதி

Added : நவ 08, 2021
Share
Advertisement
ஊட்டி:தீபாவளி விடுமுறையை முடித்து, சமவெளி பகுதிகளுக்கு பணிக்கு திரும்ப கூடுதல் பஸ்கள் இயக்கப்படாததால், நீலகிரி மக்கள் அவதிப்பட்டனர்.தீபாவளி விடுமுறையையொட்டி, நீலகிரிக்கு வந்த உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் நேற்று சொந்த ஊருக்கு திரும்ப, ஊட்டி; குன்னுார், கூடலுார், பந்தலுார் பஸ் ஸ்டாண்டுக்கு நேற்று காலை வந்தனர். இப்பகுதிகளில் கடும் கூட்ட நெரிசல்
 கூடுதல் பஸ்கள் இல்லை: பயணிகள் அவதி

ஊட்டி:தீபாவளி விடுமுறையை முடித்து, சமவெளி பகுதிகளுக்கு பணிக்கு திரும்ப கூடுதல் பஸ்கள் இயக்கப்படாததால், நீலகிரி மக்கள் அவதிப்பட்டனர்.தீபாவளி விடுமுறையையொட்டி, நீலகிரிக்கு வந்த உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் நேற்று சொந்த ஊருக்கு திரும்ப, ஊட்டி; குன்னுார், கூடலுார், பந்தலுார் பஸ் ஸ்டாண்டுக்கு நேற்று காலை வந்தனர். இப்பகுதிகளில் கடும் கூட்ட நெரிசல் இருந்தது.இந்நிலையில், ஊட்டி, குன்னுார், மேட்டுப்பாளையம், கோவை உள்ளிட்ட சில பகுதிகளுக்கு செல்ல, போதிய அளவில் கூடுதல் பஸ்களை இயக்காததால், பல மணி நேரம் காத்திருந்து கூட்ட நெரிசலில் நின்று கொண்டே பயணம் செய்தனர். பந்தலுாரில் இருந்து வெளியூருக்கு செல்ல போதிய பஸ் இல்லாததால், ஜீப்புகளில் தொங்கியபடி பல பயணிகள் சென்றனர். இதனால், கொரோனா விதிமுறைகளை பின்பற்ற முடியவில்லை. மேலும், சுற்றுலா பயணிகள் வாகனங்களும் வந்ததால், பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.பயணிகள் கூறுகையில், 'தீபாவளி உள்ளிட்ட பண்டிகை விடுமுறை தினங்களில், ஊட்டி- கோவை வழித்தடத்தை ஒரு பாதையாக மாற்ற வேண்டும்; கூடுதல் பஸ்களை இயக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X