தேஷ்முக்கிடம் விசாரணை நடத்த மும்பை உயர் நீதிமன்றம் அனுமதி

Updated : நவ 08, 2021 | Added : நவ 08, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
மும்பை-சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில், மஹாராஷ்டிர முன்னாள் அமைச்சர் அனில் தேஷ்முக்கை, அமலாக்கத் துறை காவலில் எடுத்து விசாரிக்க மும்பை உயர் நீதிமன்றம் அனுமதித்து உள்ளது.மஹாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா, தேசியவாத காங்., - காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு போலீசாரை மிரட்டி தொழிலதிபர்களிடம், 100 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கிய வழக்கில்,

மும்பை-சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில், மஹாராஷ்டிர முன்னாள் அமைச்சர் அனில் தேஷ்முக்கை, அமலாக்கத் துறை காவலில் எடுத்து விசாரிக்க மும்பை உயர் நீதிமன்றம் அனுமதித்து உள்ளது.



latest tamil news


மஹாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா, தேசியவாத காங்., - காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு போலீசாரை மிரட்டி தொழிலதிபர்களிடம், 100 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கிய வழக்கில், முன்னாள் அமைச்சர் அனில் தேஷ்முக் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். அவரை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத் துறை, சிறப்பு நீதிமன்றத்தில் அனுமதி கோரியது.

ஆனால் ஐந்து நாள் நீதிமன்ற காவலில் விசாரிக்க, சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.இந்நிலையில் அமலாக்கத் துறை சார்பில் மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் 'தீபாவளியை முன்னிட்டு இரு நாட்கள் விடுமுறையாக இருந்ததால் அனில் தேஷ்முக்கிடம் மூன்று நாட்கள் மட்டுமே விசாரணை நடத்த முடிந்தது. 'எனவே நான்கு நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும்' என, கோரப்பட்டிருந்தது.


latest tamil news


இந்த மனு, மும்பை உயர் நீதிமன்ற விடுமுறைக் கால அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அனில் தேஷ்முக்கை, 12ம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அனுமதி அளித்து, அமர்வு உத்தரவிட்டது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
seshadri - chennai,இந்தியா
08-நவ-202112:43:11 IST Report Abuse
seshadri என்ன விசாரணை செய்து என்ன பயன் தீர்ப்பு வந்த பின் (வந்தால்) உடல் nilai sari இல்லை என்று ஆஸ்பத்திரியில் சென்று படுத்து ஓய்வு எடுப்பர். கையில் பணம் இருந்தால் என்ன அயோக்கிய தநம் வேண்டுமானாலும் செய்யலாம். தீர்ப்பு வருவதற்கே பல காலம் ஆகலாம். முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் வழக்கில் தீர்ப்பு வந்து விட்டதா என்ன. ஒன்றும் வராது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X