பொது செய்தி

தமிழ்நாடு

மழை வெள்ளம் கண்டு பதற்றப்படாதீர்!

Added : நவ 08, 2021
Share
Advertisement
சூலுார்:மழை மற்றும் வெள்ளம் கண்டு பதற்றப்படாமல் செயல்படுமாறு தீயணைப்பு துறையினர் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.கோவை மற்றும் புறநகர் பகுதிகளில் வடகிழக்கு பருவ மழை தொடர்ச்சியாக பெய்து வருகிறது. குளம், குட்டைகளில் நீர் நிரம்பி வருவதுடன், தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கியும் நிற்கிறது. நொய்யல் ஆற்றில் மழைநீரின் அளவு அதிகரித்தள்ளது. வரும் நாட்களில் மழையின்
 மழை வெள்ளம் கண்டு பதற்றப்படாதீர்!

சூலுார்:மழை மற்றும் வெள்ளம் கண்டு பதற்றப்படாமல் செயல்படுமாறு தீயணைப்பு துறையினர் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.கோவை மற்றும் புறநகர் பகுதிகளில் வடகிழக்கு பருவ மழை தொடர்ச்சியாக பெய்து வருகிறது. குளம், குட்டைகளில் நீர் நிரம்பி வருவதுடன், தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கியும் நிற்கிறது. நொய்யல் ஆற்றில் மழைநீரின் அளவு அதிகரித்தள்ளது. வரும் நாட்களில் மழையின் தாக்கம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், அனைத்து அரசுத் துறைகளும் தயார் நிலையில் உள்ளன.மேலும், மழை, வெள்ளம் குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகின்றனர். சூலுார் தீயணைப்பு நிலைய அலுவலர் கோபால் தலைமையில், மதியழகன் நகரில் பொதுமக்களிடையே தீயணைப்பு வீரர்கள், செயல்முறை விளக்கம் அளித்து விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டனர்.அப்போது, நிலைய அலுவலர் கோபால் பேசியதாவது:மழைக்காலம் துவங்கியுள்ளதால் ஆறு, குளம், குட்டைப்பகுதிகள், தாழ்வான பகுதிகளில் வெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. மழைக்காலம் முடியும் வரை பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டியது அவசியம். நீர்நிலைகளுக்கு அருகே பெரியவர்கள், சிறியவர்கள் என, யாரும் செல்ல வேண்டாம். முதலில் பதட்டப்படாமல் இருக்க வேண்டும். வதந்திகளை நம்ப வேண்டாம்; அதை பரப்பவும் வேண்டாம். தீயணைப்பு நிலையம் உள்ளிட்ட அரசு அலுவலகம், அதிகாரிகளின் தொலைபேசி எண்களை குறித்து வைத்திருக்க வேண்டும். மழை வெள்ளம் வந்தால், கால்நடைகளுடன் அனைவரும் மேடான பகுதிக்கு செல்ல வேண்டும். சுவிட்ச், காஸ் சிலிண்டரை 'ஆப்' செய்து விடுங்கள். மின் ஒயர்கள் அறுந்து தண்ணீரில் கிடந்தால், அந்த இடத்துக்கு அருகில் செல்லக்கூடாது. வெள்ளத்தில் சிக்கியவரை மீட்க, உயிர்காக்கும் உபகரணங்கள் இல்லாமல் அருகில் செல்லவேண்டாம்.இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X