சிறப்பு பகுதிகள்

டீ கடை பெஞ்ச்

இடம் மாற துடிக்கும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள்!

Updated : நவ 08, 2021 | Added : நவ 08, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
''யாருக்கும் பேச வாய்ப்பு கிடைக்கலை பா...'' என, பெஞ்ச் பேச்சை துவக்கினார், அன்வர்பாய்.''விளக்கமா சொல்லுங்க...'' என்றார் அந்தோணிசாமி.''பா.ஜ., தேசிய செயற்குழுக் கூட்டம், டில்லியில நேத்து ஆறு மணி நேரம் வரை நடந்துச்சு... தமிழகத்துல இருந்து மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் முருகன் எல்லாம் டில்லிக்கு நேர்ல போய் பங்கேற்றாங்க பா...''பொன் ராதாகிருஷ்ணன், குஷ்பு
டீ கடை பெஞ்ச்

''யாருக்கும் பேச வாய்ப்பு கிடைக்கலை பா...'' என, பெஞ்ச் பேச்சை துவக்கினார், அன்வர்பாய்.

''விளக்கமா சொல்லுங்க...'' என்றார் அந்தோணிசாமி.

''பா.ஜ., தேசிய செயற்குழுக் கூட்டம், டில்லியில நேத்து ஆறு மணி நேரம் வரை நடந்துச்சு... தமிழகத்துல இருந்து மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் முருகன் எல்லாம் டில்லிக்கு நேர்ல போய் பங்கேற்றாங்க பா...

''பொன் ராதாகிருஷ்ணன், குஷ்பு உள்ளிட்ட ஏழெட்டு பேர், 'வீடியோ கான்பரன்ஸ்'ல கலந்துக்கிட்டாங்க... கூட்டத்துல நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்ல ஒண்ணை வழிமொழிய, அண்ணாமலைக்கு வாய்ப்பு குடுத்தாங்க...

ஆனா, தமிழகத்துல இருன்னை வரைக்கும் போய், முட்டி மோதியும் காரியம் நடக்கலல்லா...'' என்றார் பெரியசாமி

அந்து யாருக்கும் பேசுறதுக்கு மட்டும் வாய்ப்பு தரலை பா...'' என, நடந்த சம்பவத்தை விவரித்து முடித்தார், அன்வர்பாய்.

உடனே, ''செண்ணாச்சி.''யார், எதுக்கு போனது பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.

''கோவை மாவட்டம், சின்னதடாகம் பள்ளத்தாக்குல ஏராளமான செங்கல் சூளைகள் இருந்துச்சு... விதிகளை மீறி இயங்கிய இந்த சூளைகளை மூடிட்டாவ வே...

''மறுபடியும் சூளைகளை இயக்க, அரசியல் ரீதியில அதன் உரிமையாளர்கள் முயற்சி எடுத்துட்டு இருக்காவ... இதுக்காக, உரிமையாளர்கள் தரப்புல பெரிய அளவுல நிதி திரட்டி, சென்னையில ஆளுங்கட்சி முக்கிய புள்ளிகளை சந்திக்க, ஒரு குழுவினர் பண பெட்டியோட போனாவ வே...

''ஆனா, பல நாட்கள் சென்னையில தங்கியும், காரியம் முடியலை... இதனால, சென்னைக்கு போன குழு, தொங்குன முகத்தோட ஊர் திரும்பிட்டு வே...

''அதே நேரம், சென்னையில பல லட்சம் ரூபாய் செலவானதா கணக்கு காட்டியிருக்காவ...

''இதனால, கடுப்பான மற்ற உரிமையாளர்கள், 'நீங்க அனுமதியே வாங்கி தர வேண்டாம்... எங்க பணத்தை திருப்பி குடுங்க'ன்னு கேட்டு தகராறு பண்ணிட்டு இருக்காவ வே...''என்றார் அண்ணாச்சி.

''இதே மாதிரி ஒரு தகவல் என்கிட்டயும் இருக்கு ஓய்...'' என, 'லீடு' தந்த குப்பண்ணாவே தொடர்ந்தார்...

''போன அ.தி.மு.க., ஆட்சியில, சுகாதாரத் துறை அமைச்சரா இருந்த விஜயபாஸ்கர் வசம் தான், உணவு பாதுகாப்பு துறையும் இருந்தது... இப்ப, இந்த துறைக்கு சுப்பிரமணியன் அமைச்சரா இருக்கார்...

''போன ஆட்சியில, உணவு பாதுகாப்பு துறையில ஏகப்பட்ட முறைகேடுகள் நடந்திருக்கிறதை கண்டுபிடிச்சிருக்கார்...


''இப்ப இருக்கற பல மாவட்ட நியமன அலுவலர்கள், உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கும் இதுல தொடர்பு இருக்காம்...

''இதனால, அவாள்லாம் சென்னையில அமைச்சர் தரப்பை பார்த்து, வேற வேற ஊர்களுக்கு இடமாறுதல் வாங்க முயற்சி செய்திருக்கா... அமைச்சரோ, யாரையும் பார்க்கறதா இல்லைன்னு சொல்லிட்டாராம் ஓய்...

''இதனால, மாவட்ட அலுவலர்கள், தங்களது ஊருல செல்வாக்கா இருக்கற அமைச்சர்கள், எம்.பி.,க்களை ரகசியமா பார்த்து, இடமாறுதல் வாங்கி தரும்படி நச்சரிச்சுண்டு இருக்கா ஓய்...'' என்றார் குப்பண்ணா.

''அது சரி... அடுத்த ஊருக்கு போயிட்டா மட்டும், அவங்க செஞ்ச தப்பெல்லாம் இல்லன்னு ஆயிடுமா வே...'' என்றபடியே அண்ணாச்சி எழ, மற்றவர்களும் கிளம்பினர்.

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
08-நவ-202119:43:10 IST Report Abuse
D.Ambujavalli அதிகாரிகளுக்கு தெரியும், அமைச்சர் எஸ்கேப் ஆகிவிடுவார், பெரிய இடத்தை கவனித்து, மாட்ட போவது தாங்கள்தான் என்று
Rate this:
Cancel
jysen - Madurai,இந்தியா
08-நவ-202110:29:45 IST Report Abuse
jysen DOs and FSOs are presently the richest people surpassing even the RTOs and Registration department persons.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X