பொது செய்தி

தமிழ்நாடு

முருகன் கோவில்களில் நாளை சூரசம்ஹார விழா

Added : நவ 08, 2021
Share
Advertisement
சூலுார்:சூலுார் வட்டார முருகன் கோவில்களில், சூரசம்ஹார விழா நாளை நடக்கிறது.சூலுார் வட்டாரத்தில், பிரசித்தி பெற்ற முருகன் கோவில்களான, கருமத்தம்பட்டி சென்னியாண்டவர் கோவில், குமரன் கோட்டம், செஞ்சேரிமலை மந்திரகிரி வேலாயுதசுவாமி, சூலுார் சிவன் கோவில், சின்னியம்பாளையம் வேல் முருகன் கோவில், அரசூர் பரமசிவன் கோவில் ஆகியவை உள்ளன.இக்கோவில்களில், கடந்த, 5ம் தேதி காப்பு
 முருகன் கோவில்களில் நாளை சூரசம்ஹார விழா

சூலுார்:சூலுார் வட்டார முருகன் கோவில்களில், சூரசம்ஹார விழா நாளை நடக்கிறது.சூலுார் வட்டாரத்தில், பிரசித்தி பெற்ற முருகன் கோவில்களான, கருமத்தம்பட்டி சென்னியாண்டவர் கோவில், குமரன் கோட்டம், செஞ்சேரிமலை மந்திரகிரி வேலாயுதசுவாமி, சூலுார் சிவன் கோவில், சின்னியம்பாளையம் வேல் முருகன் கோவில், அரசூர் பரமசிவன் கோவில் ஆகியவை உள்ளன.இக்கோவில்களில், கடந்த, 5ம் தேதி காப்பு கட்டுதலுடன் கந்தசஷ்டி விழா துவங்கியது. தினமும் முருகப்பெருமானுக்கு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்து வருகின்றன. பக்தர்கள் ஆறு நாட்கள் விரதம் இருந்து பூஜையில் பங்கேற்று முருகப்பெருமானை வழிபட்டு வருகின்றனர். நாளை மாலை, அனைத்து கோவில்களிலும் சூரசம்ஹார விழா நடக்கிறது. நாளை மறுநாள் காலை, திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.இந்நிலையில், கருமத்தம்பட்டி சென்னியாண்டவர் கோவிலில், வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமான், சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சிறப்பு பூஜையில் பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X