பொது செய்தி

தமிழ்நாடு

ஆம்போதி கிராமத்தில் புலி நடமாட்டம்?

Added : நவ 08, 2021
Share
Advertisement
அன்னுார்:அன்னுார் அருகே ஊருக்குள் புலி வந்ததாக வெளியான தகவலையடுத்து வனத்துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.அன்னுார் அருகே ஆம்போதியில் நேற்று முன்தினம் ஊரை ஒட்டிய ஓடை பள்ளத்தில் ஒரு புலி சென்றதாக விவசாயி ஒருவரும், தொழிலாளர்கள் இருவரும் பதற்றத்துடன் தெரிவித்தனர். போலீசார் மற்றும் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சிறுமுகை வனச்சரகர் செந்தில்குமார்
 ஆம்போதி கிராமத்தில் புலி நடமாட்டம்?

அன்னுார்:அன்னுார் அருகே ஊருக்குள் புலி வந்ததாக வெளியான தகவலையடுத்து வனத்துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.அன்னுார் அருகே ஆம்போதியில் நேற்று முன்தினம் ஊரை ஒட்டிய ஓடை பள்ளத்தில் ஒரு புலி சென்றதாக விவசாயி ஒருவரும், தொழிலாளர்கள் இருவரும் பதற்றத்துடன் தெரிவித்தனர். போலீசார் மற்றும் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சிறுமுகை வனச்சரகர் செந்தில்குமார் தலைமையில் வனக்காவலர்களும், போலீஸ் இன்ஸ்பெக்டர் நித்யா தலைமையிலான போலீசாரும் சம்பவ இடத்துக்கு சென்று, நான்கு மணி நேரம் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். விவசாயி கூறிய இடத்தில் கால் தடத்தை ஆய்வு செய்தனர்.பின்னர், வனச்சரகர் செந்தில்குமார் கூறுகையில், "கால் தடத்தில் நகம் தெரிகிறது. புலியின் கால் நகம் பதியாது. இது காட்டுப்பூனை அல்லது நாயாக இருக்கலாம். எனினும், புலி இருப்பது போட்டோ அல்லது வீடியோ வாயிலாக உறுதி செய்யப்பட்டால் தகவல் தெரிவிக்கும்படி கூறியுள்ளோம்," என்றார். இந்நிலையில், நேற்று காலை மீண்டும் ஆம்போதியில் தெற்குப் பகுதியில் கல்குவாரியில் புலி வந்ததாக தகவல் பரவியது. இதையடுத்து பொதுமக்கள் நேற்று ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துசெல்லவில்லை. குழந்தைகளை வெளியில் அனுப்பாமல் வீட்டிலேயே வைத்திருந்தனர். வனத்துறை மற்றும் போலீசார் ஆம்போதி மற்றும் அக்கரை செங்கப்பள்ளி ஊராட்சியில் தேடுதல் வேட்டை நடத்தி அச்சத்தை போக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X