சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

'டவுட்' தனபாலு

Added : நவ 08, 2021
Share
Advertisement
அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன்: தேர்தல் வெற்றி, தோல்வியை தாண்டி, அ.தி.மு.க.,வை மீட்டெடுக்கவும், உண்மையான ஜெயலலிதா ஆட்சியை உருவாக்கவும், அ.ம.மு.க., உருவாக்கப்பட்டது. தேர்தலை சந்தித்து வெற்றி பெற்று, அ.தி.மு.க.,வை மீட்டெடுக்க விரும்புகிறேன். சசிகலா வழக்கு தொடர்ந்து சட்ட ரீதியாக போராடி வருகிறார். என் பாதை வேறு; அவர் பாதை வேறு. இலக்கு ஒன்று தான்.'டவுட்' தனபாலு: உங்கள்
 'டவுட்' தனபாலு

அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன்: தேர்தல் வெற்றி, தோல்வியை தாண்டி, அ.தி.மு.க.,வை மீட்டெடுக்கவும், உண்மையான ஜெயலலிதா ஆட்சியை உருவாக்கவும், அ.ம.மு.க., உருவாக்கப்பட்டது. தேர்தலை சந்தித்து வெற்றி பெற்று, அ.தி.மு.க.,வை மீட்டெடுக்க விரும்புகிறேன். சசிகலா வழக்கு தொடர்ந்து சட்ட ரீதியாக போராடி வருகிறார். என் பாதை வேறு; அவர் பாதை வேறு. இலக்கு ஒன்று தான்.

'டவுட்' தனபாலு: உங்கள் இருவருக்கும் இலக்கு, அ.தி.மு.க.,வை கைப்பற்றுவது தான் என்பது, 'டவுட்' இன்றி புரிகிறது. ஆனால், இ.பி.எஸ்., - ஓ.பி.எஸ்., மட்டுமில்லை, ஒன்றரை கோடி, அ.தி.மு.க.,வினர், உங்கள் இருவரையும் விரும்பவில்லையே... அதைப் பற்றி யோசித்தது போல தெரியவில்லையே!

பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை: தமிழுக்காக வாழ்கிறோம்; தமிழர் நலனுக்காக உழைக்கிறோம் என மூச்சுக்கு, 300 முறை, தமிழர் வாழ்வு, தமிழர் நலன் பற்றி அக்கறைப்படுவதாக கூறும், தி.மு.க., தலைமை, காலம் காலமாக தமிழர்களை ஏமாற்றும் வேலையைத் தான் செய்து வருகிறது.
'டவுட்' தனபாலு: இதை, நேற்று அரசியலுக்கு வந்த, முன்னாள், ஐ.பி.எஸ்., அதிகாரியான நீங்கள் அறிந்துள்ளீர்கள். ஆனால், தமிழக மக்கள் இன்னும் உணராமல் உள்ளனர். அவ்வாறு உணர்ந்த தமிழ் மக்கள் தான், தி.மு.க.,வை ஆட்சியில் அமர்த்துகின்றனரோ என்ற, 'டவுட்' ஏற்படுகிறது. நீங்கள் சொல்வதை பார்த்தால், தமிழர்கள் மீது இவர்களுக்கு உண்மையிலேயே அக்கறை கிடையாதோ... lll

அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம்: என்னுடைய வாழ்க்கை, முல்லைப் பெரியாறு அணையுடன் பின்னிப் பிணைந்தது. நான் முல்லைப் பெரியாறு அணையை பார்வையிட்டதே இல்லை என, அமைச்சர் கூறுவது, முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் உள்ளது. முல்லைப் பெரியாறு பிரச்னை மட்டுமல்ல... தமிழக மக்களின் எந்த பிரச்னை குறித்தும் பேச, அ.தி.மு.க.,வுக்கு முழு உரிமை உண்டு.

'டவுட்' தனபாலு: முல்லை பெரியாறு அணையை பார்வையிட சென்ற அமைச்சர் துரைமுருகன், தனக்கு, 80 வயதாகிறது என்ற உண்மையை மட்டும் தான் சொன்னாரோ என்ற, 'டவுட்' ஏற்படுகிறது. ஏனெனில், நீங்கள் சொல்வதுபடி பார்த்தால், முல்லை பெரியாறு அணைக்கு நீங்கள் அடிக்கடி சென்று வந்தது உறுதியாகிறதே!

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X