சிறப்பு பகுதிகள்

பக்கவாத்தியம்

'இதை எல்லாம் கண்டிக்க கூடாதா?'

Updated : நவ 08, 2021 | Added : நவ 08, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத்த ஊமப்பாளையத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட வகுப்பறைகள் திறப்பு விழா, சமீபத்தில் நடந்தது. இதில், மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் பங்கேற்றனர். அமைச்சர் ராமச்சந்திரன் பேசுகையில், 'கடந்த ஆட்சியில் மின்துறையில் நடந்த தவறுகளை, செந்தில் பாலாஜி சீர்திருத்தம் செய்து
பக்கவாத்தியம்

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத்த ஊமப்பாளையத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட வகுப்பறைகள் திறப்பு விழா, சமீபத்தில் நடந்தது. இதில், மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் பங்கேற்றனர்.

அமைச்சர் ராமச்சந்திரன் பேசுகையில், 'கடந்த ஆட்சியில் மின்துறையில் நடந்த தவறுகளை, செந்தில் பாலாஜி சீர்திருத்தம் செய்து வருகிறார். எதிர்காலத்தில், கோவை மாவட்டம் முதல்வருக்கு சாதகமான மாவட்டமாக மாறும்' என்றார்.

அங்கிருந்த முதியவர் ஒருவர், 'கடந்த, தி.மு.க., ஆட்சியில், 'மின்வெட்டு துறை' என கிண்டல் செய்யும் அளவுக்கு, மின் வினியோகம் மோசமாக இருந்தது. அதை மறைத்து, முந்தைய, அ.தி.மு.க., ஆட்சியின் தவறுகளை இந்த அமைச்சர் சீர்திருத்தம் செய்து வருகிறார் என, பச்சை பொய்யை கூறுகின்றனரே...'என்றதும், சுற்றியிருந்தோர், 'அது தானே அரசியல்' என்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
08-நவ-202119:38:25 IST Report Abuse
D.Ambujavalli இந்த ஆட்சி கூட அதே பேரை வாங்கும் நாள் தூரத்தில் இல்லை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X