சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நெரிசலில் சிக்கித் தவித்த மக்கள்

Added : நவ 08, 2021
Share
Advertisement
அன்னுார்:அன்னுார் நகரில் ஏற்பட்ட கடும் போக்குவரத்து நெரிசலில் மக்கள் சிக்கித் தவித்தனர்.கோவை--சத்தி தேசிய நெடுஞ்சாலை, மேட்டுப்பாளையம்--அவிநாசி மாநில நெடுஞ்சாலைகளுக்கு மையமாக அன்னுார் உள்ளது. பள்ளி, கல்லுாரிகள், தமிழக அரசு அலுவலகங்கள் நான்கு நாள் தீபாவளி விடுமுறை முடிந்து, சொந்த ஊர் திரும்புவோர், விடுதிகளுக்கு செல்வோர் என, நேற்று பல ஆயிரம் வாகனங்கள் அன்னுார் வழியாக
 நெரிசலில் சிக்கித் தவித்த மக்கள்

அன்னுார்:அன்னுார் நகரில் ஏற்பட்ட கடும் போக்குவரத்து நெரிசலில் மக்கள் சிக்கித் தவித்தனர்.கோவை--சத்தி தேசிய நெடுஞ்சாலை, மேட்டுப்பாளையம்--அவிநாசி மாநில நெடுஞ்சாலைகளுக்கு மையமாக அன்னுார் உள்ளது. பள்ளி, கல்லுாரிகள், தமிழக அரசு அலுவலகங்கள் நான்கு நாள் தீபாவளி விடுமுறை முடிந்து, சொந்த ஊர் திரும்புவோர், விடுதிகளுக்கு செல்வோர் என, நேற்று பல ஆயிரம் வாகனங்கள் அன்னுார் வழியாக சென்றன. இதனால் அன்னுாரில், கோவை சாலை, மேட்டுப்பாளையம் சாலை மற்றும் பிரதான சாலை சந்திக்கும் இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீசார் பலர் மூன்று சாலை சந்திப்பு மற்றும் சத்தி சாலை சந்திப்பில் நின்று வாகனங்களை ஒழுங்குபடுத்தினர். அன்னுார் நகரை கடப்பதற்கு, 15 நிமிடங்களுக்கு மேலானது. கோவை சாலை, சத்தி சாலை, அவிநாசி சாலையில், ஒரு கி.மீ., துாரத்துக்கு மேல் வாகனங்கள் வரிசைகட்டி நின்றன. இதனால், அரசு மற்றும் தனியார் பஸ்கள் குறிப்பிட்ட நேரத்தில் புறப்பட்டு செல்ல முடியாமல், 45 நிமிடங்களுக்கு மேல் தாமதமாகின.'போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண, புறவழிச்சாலை, உயர்மட்ட மேம்பாலம் அமைத்தல், ஆக்கிரமிப்பு அகற்றுதல் ஆகிய நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்' என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X