பொது செய்தி

தமிழ்நாடு

இதே நாளில் அன்று

Added : நவ 08, 2021
Share
Advertisement
நவ., 8, 1966சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே உள்ள அரணையூர் எனும் கிராமத்தில், 1966 நவ., 8-ல் பிறந்தவர் சீமான். இளங்கலை பொருளாதாரம் பட்டம் பெற்றவர், சினிமா மீது ஏற்பட்ட ஆர்வத்தால் சென்னை வந்து, இயக்குனர்கள் மணிவண்ணன், பாரதிராஜா ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தார்.பாஞ்சாலங்குறிச்சி, இனியவளே, வீரநடை, தம்பி, வாழ்த்துகள் ஆகிய படங்களை இயக்கி உள்ளார்; சில படங்களில்
 இதே நாளில் அன்று

நவ., 8, 1966

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே உள்ள அரணையூர் எனும் கிராமத்தில், 1966 நவ., 8-ல் பிறந்தவர் சீமான். இளங்கலை பொருளாதாரம் பட்டம் பெற்றவர், சினிமா மீது ஏற்பட்ட ஆர்வத்தால் சென்னை வந்து, இயக்குனர்கள் மணிவண்ணன், பாரதிராஜா ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தார்.

பாஞ்சாலங்குறிச்சி, இனியவளே, வீரநடை, தம்பி, வாழ்த்துகள் ஆகிய படங்களை இயக்கி உள்ளார்; சில படங்களில் நடித்துள்ளார்.விடுதலை புலிகளுக்கு ஆதரவாகவும், பிரிவினையை துாண்டுவதாகவும் பேசினார் என, தேசிய பாதுகாப்புச் சட்டம் உட்பட பல்வேறு பிரிவுகளில் தொடர்ந்து ஐந்து முறை கைது செய்யப்பட்டார்.

1958ல் சி.பா.ஆதித்தனாரால் உருவாக்கப்பட்ட, 'நாம் தமிழர்' இயக்கத்தை, கட்சியாக மாற்றி, அதன் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வருகிறார்.கடந்த 2016- தேர்தல் முதல், நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிட்டு வருகிறது. எந்த வெற்றியும் பெறாத நிலையிலும், அதன் ஓட்டு வங்கி மெல்ல உயர்ந்து வருகிறது.சீமான் பிறந்த தினம் இன்று!

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X