பொது செய்தி

தமிழ்நாடு

கலெக்டரை காண முடியாமல் ஏமாற்றம்

Added : நவ 08, 2021
Share
Advertisement
மேட்டுப்பாளையம்;கோரிக்கை மனு கொடுக்க நீண்ட நேரம் காத்திருந்த பொதுமக்கள் மாவட்ட கலெக்டர் வராததால் ஏமாற்றம் அடைந்தனர்.காரமடை ஊராட்சி ஒன்றியம், ஜடையம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட இனியா நகரில், 50க்கும் மேற்பட்ட வீடுகள்உள்ளன. இப்பகுதிக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டதை அடுத்து, காரமடை ஊராட்சி ஒன்றிய, 15வது நிதிக்குழு மானிய நிதியிலிருந்து, 5.90 லட்சம் ரூபாய் செலவில், 30

மேட்டுப்பாளையம்;கோரிக்கை மனு கொடுக்க நீண்ட நேரம் காத்திருந்த பொதுமக்கள் மாவட்ட கலெக்டர் வராததால் ஏமாற்றம் அடைந்தனர்.காரமடை ஊராட்சி ஒன்றியம், ஜடையம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட இனியா நகரில், 50க்கும் மேற்பட்ட வீடுகள்உள்ளன. இப்பகுதிக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டதை அடுத்து, காரமடை ஊராட்சி ஒன்றிய, 15வது நிதிக்குழு மானிய நிதியிலிருந்து, 5.90 லட்சம் ரூபாய் செலவில், 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட, புதிய மேல்நிலை தொட்டி கட்டப்பட்டது.இத்தொட்டியை மாவட்ட கலெக்டர் சமீரன் திறந்துவைக்க வருவதாக தகவல் பரவியது. இதற்காக நேற்று மாலை, 4:00 மணிக்கு ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டது.காட்டுபிள்ளையார் கோவில், தெற்கு தோட்டம் ஆகிய பகுதிகளில் வசிக்கும், 50க்கும் மேற்பட்டோர், இலவச வீட்டு மனை பட்டா கோரி, கலெக்டரிடம் மனு கொடுக்க காத்திருந்தனர். இரவு, 7:15 மணி ஆகியும் கலெக்டர் மற்றும் அதிகாரிகள் குழுவினர் வரவில்லை. இரவு, 7:00 மணி வரை ஓடந்துறை ஊராட்சி அலுவலகத்தில், ஆய்வுக் கூட்டம் நடந்ததும், அதையடுத்து அதிகாரிகள் குழுவினர் கோவை சென்றுவிட்ட தகவலும் பின்னர் தெரியவந்தது. இதனால், ஏமாற்றம் அடைந்தத பொது மக்கள், ஊராட்சி தலைவர் பழனிசாமியிடம் மனு கொடுத்தனர். தொடர்ந்து, ஊராட்சி தலைவர் மேல்நிலை குடிநீர் தொட்டியை திறந்து வைத்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X