பொது செய்தி

தமிழ்நாடு

பொலிவிழந்து காட்சியளிக்கும் கோவில் கோபுரங்கள்

Added : நவ 08, 2021
Share
Advertisement
சூலுார்:சூலுாரில் பொலிவிழந்து இருக்கும் சிவன், பெருமாள் கோவில்களில் திருப்பணிகள் மேற்கொள்ள பக்தர்கள் வேண்டுகோள்விடுக்கின்றனர்.சூலுார் ரயில்வே பீடர் ரோட்டில், சின்னக்குளத்தை ஒட்டி, தையல் நாயகி சமேத வைத்தியநாத சுவாமி திருக்கோவிலும், பெரியகுளத்தை ஒட்டி, ஸ்ரீ தேவி, பூதேவி சமேத திருவேங்கடநாத பெருமாள் கோவிலும் உள்ளன. பல நுாற்றாண்டுகளுக்கு மேலான, பழமையான இக்கோவில்கள்
 பொலிவிழந்து காட்சியளிக்கும் கோவில் கோபுரங்கள்

சூலுார்:சூலுாரில் பொலிவிழந்து இருக்கும் சிவன், பெருமாள் கோவில்களில் திருப்பணிகள் மேற்கொள்ள பக்தர்கள் வேண்டுகோள்விடுக்கின்றனர்.சூலுார் ரயில்வே பீடர் ரோட்டில், சின்னக்குளத்தை ஒட்டி, தையல் நாயகி சமேத வைத்தியநாத சுவாமி திருக்கோவிலும், பெரியகுளத்தை ஒட்டி, ஸ்ரீ தேவி, பூதேவி சமேத திருவேங்கடநாத பெருமாள் கோவிலும் உள்ளன. பல நுாற்றாண்டுகளுக்கு மேலான, பழமையான இக்கோவில்கள் சூலுாரின் அடையாளமாக உள்ளன. அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவில்களுக்கு, பல நுாறு ஏக்கர் பூமிகள் உள்ளன. கோவில்களில் நடக்கும் விழாக்களில், சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்வது வழக்கம். இரு கோவில்களுக்கும் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு, பல ஆண்டுகளுக்கு மேலாகிறது. இதனால், கோவில் கோபுரங்கள், பரிகார தளங்கள் பொலிவிழந்து உள்ளதால், பக்தர்கள் வேதனையடைந்துள்ளனர். பக்தர்கள் கூறுகையில்,'சூலுாரில் உள்ள சிவன் கோவில், பெருமாள் கோவில்களில் கும்பாபிஷேகம் நடந்து, 12 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. சிவன் கோவிலில் கோபுரங்களில் வண்ணங்கள் பொலிவிழந்து விட்டது. ஆங்காங்கே தளங்கள் பெயர்ந்துள்ளன. சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து அலங்கோலமாக காட்சியளிக்கின்றன. பெருமாள் கோவிலிலும் இதேநிலை உள்ளது. சிவன் கோவில் திருப்பணிகளுக்கு, 20 லட்சமும், பெருமாள் கோவில் திருப்பணிகளுக்கு, 37 லட்சம் அரசு ஒதுக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், திருப்பணிகள் தொடங்குவதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை;எப்போது துவங்குவார்கள் எனத்தெரியவில்லை. விரைந்து திருப்பணிகளை துவங்க வேண்டும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X