பொது செய்தி

இந்தியா

ஆர்.எஸ்.எஸ்., அலுவலகம் டில்லிக்கு மாற்றம்?

Updated : நவ 08, 2021 | Added : நவ 08, 2021 | கருத்துகள் (10)
Share
Advertisement
ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் தலைமை அலுவலகம் நாக்பூரிலிருந்து டில்லிக்கு மாற்றப்படலாம் என, தகவல்கள் வெளியாகியுள்ளன.ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் 1925ல் துவங்கப்பட்டது. அப்போதிலிருந்து அந்த அமைப்பின் தலைமை அலுவலகம் நாக்பூரில் தான் செயல்பட்டு வருகிறது.நாக்பூரில் 'கேசவ் பவன்' என்ற பெயரில் மிக பிரமாண்டமான கட்டடத்தில் ஆர்.எஸ்.எஸ்., தலைமை அலுவலகம்

ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் தலைமை அலுவலகம் நாக்பூரிலிருந்து டில்லிக்கு மாற்றப்படலாம் என, தகவல்கள் வெளியாகியுள்ளன.



latest tamil news


ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் 1925ல் துவங்கப்பட்டது. அப்போதிலிருந்து அந்த அமைப்பின் தலைமை அலுவலகம் நாக்பூரில் தான் செயல்பட்டு வருகிறது.நாக்பூரில் 'கேசவ் பவன்' என்ற பெயரில் மிக பிரமாண்டமான கட்டடத்தில் ஆர்.எஸ்.எஸ்., தலைமை அலுவலகம் செயல்படுகிறது.

மத்தியில் 2014ல் பிரதமர் மோடி தலைமையில் பா.ஜ., ஆட்சி அமைந்த பின் ஆர்.எஸ்.எஸ்., மூத்த தலைவர்கள் டில்லிக்கு அடிக்கடி வந்து பா.ஜ., தலைவர்களை சந்திப்பது வழக்கமாக உள்ளது.மேலும், 2024ல் நடக்க உள்ள லோக்சபா தேர்தலுக்கான வியூகம் பற்றி பா.ஜ., - ஆர்.எஸ்.எஸ்., தலைவர்கள் ஆலோசனை நடத்த துவங்கிஉள்ளனர். இதனால் தலைமை அலுவலகத்தை நாக்பூரிலிருந்து, டில்லிக்கு மாற்றலாமா என, ஆர்.எஸ்.எஸ்., யோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகிஉள்ளன.

டில்லி ஜண்டேவாலன் விரிவாக்கப் பகுதியில் ஆர்.எஸ்.எஸ்., சார்பில் மிக பிரமாண்ட கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. ௨.௫ லட்சம் சதுர அடியில் இந்த கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. கட்டுமான பணிகள் முடிந்த பின் ஆர்.எஸ்.எஸ்., அலுவலகம், தலா ௧௨ - ௧௬ மாடிகள் கொண்ட இரண்டு கட்டடங்களாக இருக்கும் என, ஆர்.எஸ்.எஸ்., வட்டாரங்கள் தெரிவித்தன. அடுத்த ஆண்டுக்குள் கட்டுமான பணிகளை முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.


latest tamil news


டில்லி தீன்தயாள் உபாத்யாய் சாலையில் பா.ஜ., தலைமை அலுவலகம் உள்ளது. 1.7 லட்சம் சதுர அடியில் கட்டப்பட்டுள்ள இந்த கட்டடம் தான், உலகிலேயே மிகப்பெரிய அரசியல் கட்சி அலுவலகமாக கருதப்படுகிறது. ஆனால் கட்டுமான பணிகள் முடிந்த பின், பா.ஜ., அலுவலகத்தை விட ஆர்.எஸ்.எஸ்., அலுவலகம் தான் பிரமாண்டமாக இருக்கும்.
புதுடில்லி நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DVRR - Kolkata,இந்தியா
08-நவ-202116:59:50 IST Report Abuse
DVRR ஐயோ ஐயோ அக்கிரமம் அநியாயம் ஆர் எஸ் எஸ் டில்லிக்கு மாறுதலா அப்போ ஆம் ஆத்மி கட்சி அம்போ சிவ சம்போவா?????
Rate this:
Cancel
08-நவ-202116:31:50 IST Report Abuse
சம்பத் குமார் 1). வாழ்த்துக்கள் புது இடம் மற்றும் கட்டிட விரிவாக்க திட்டங்களுக்கு.2). தேசியம் தெய்வீகம் இரண்டையும் இரு கண்களாக பாவித்து வாழும் எல்லா சாதி மதம் சார்ந்தவர்கள் அனைவரும் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் ஆவார்கள். நன்றி வணக்கம் ஐயா
Rate this:
Cancel
விமர்சகன் - kovai,இந்தியா
08-நவ-202115:47:14 IST Report Abuse
விமர்சகன் இதெல்லாம் செய்ங்க எய்ம்ஸ் மருத்துவமனை கட்டாதீங்க கோதாவரி காவிரி இணைக்காதீங்க ஆனா இந்துக்கள் ஒட்டு மட்டும் வேணும் வெறும் தெய்வ பக்தி தேச பக்தியா னு சொல்லியே நாட்களை நகர்த்துங்கள் விழிப்புணர்வில்லாத இந்துக்களும் உங்களை நம்பி வாக்களித்து வீணா போகட்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X