ஆர்.எஸ்.எஸ்., அலுவலகம் டில்லிக்கு மாற்றம்?| Dinamalar

பொது செய்தி

இந்தியா

ஆர்.எஸ்.எஸ்., அலுவலகம் டில்லிக்கு மாற்றம்?

Updated : நவ 08, 2021 | Added : நவ 08, 2021 | கருத்துகள் (10)
Share
ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் தலைமை அலுவலகம் நாக்பூரிலிருந்து டில்லிக்கு மாற்றப்படலாம் என, தகவல்கள் வெளியாகியுள்ளன.ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் 1925ல் துவங்கப்பட்டது. அப்போதிலிருந்து அந்த அமைப்பின் தலைமை அலுவலகம் நாக்பூரில் தான் செயல்பட்டு வருகிறது.நாக்பூரில் 'கேசவ் பவன்' என்ற பெயரில் மிக பிரமாண்டமான கட்டடத்தில் ஆர்.எஸ்.எஸ்., தலைமை அலுவலகம்

ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் தலைமை அலுவலகம் நாக்பூரிலிருந்து டில்லிக்கு மாற்றப்படலாம் என, தகவல்கள் வெளியாகியுள்ளன.



latest tamil news


ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் 1925ல் துவங்கப்பட்டது. அப்போதிலிருந்து அந்த அமைப்பின் தலைமை அலுவலகம் நாக்பூரில் தான் செயல்பட்டு வருகிறது.நாக்பூரில் 'கேசவ் பவன்' என்ற பெயரில் மிக பிரமாண்டமான கட்டடத்தில் ஆர்.எஸ்.எஸ்., தலைமை அலுவலகம் செயல்படுகிறது.

மத்தியில் 2014ல் பிரதமர் மோடி தலைமையில் பா.ஜ., ஆட்சி அமைந்த பின் ஆர்.எஸ்.எஸ்., மூத்த தலைவர்கள் டில்லிக்கு அடிக்கடி வந்து பா.ஜ., தலைவர்களை சந்திப்பது வழக்கமாக உள்ளது.மேலும், 2024ல் நடக்க உள்ள லோக்சபா தேர்தலுக்கான வியூகம் பற்றி பா.ஜ., - ஆர்.எஸ்.எஸ்., தலைவர்கள் ஆலோசனை நடத்த துவங்கிஉள்ளனர். இதனால் தலைமை அலுவலகத்தை நாக்பூரிலிருந்து, டில்லிக்கு மாற்றலாமா என, ஆர்.எஸ்.எஸ்., யோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகிஉள்ளன.

டில்லி ஜண்டேவாலன் விரிவாக்கப் பகுதியில் ஆர்.எஸ்.எஸ்., சார்பில் மிக பிரமாண்ட கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. ௨.௫ லட்சம் சதுர அடியில் இந்த கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. கட்டுமான பணிகள் முடிந்த பின் ஆர்.எஸ்.எஸ்., அலுவலகம், தலா ௧௨ - ௧௬ மாடிகள் கொண்ட இரண்டு கட்டடங்களாக இருக்கும் என, ஆர்.எஸ்.எஸ்., வட்டாரங்கள் தெரிவித்தன. அடுத்த ஆண்டுக்குள் கட்டுமான பணிகளை முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.


latest tamil news


டில்லி தீன்தயாள் உபாத்யாய் சாலையில் பா.ஜ., தலைமை அலுவலகம் உள்ளது. 1.7 லட்சம் சதுர அடியில் கட்டப்பட்டுள்ள இந்த கட்டடம் தான், உலகிலேயே மிகப்பெரிய அரசியல் கட்சி அலுவலகமாக கருதப்படுகிறது. ஆனால் கட்டுமான பணிகள் முடிந்த பின், பா.ஜ., அலுவலகத்தை விட ஆர்.எஸ்.எஸ்., அலுவலகம் தான் பிரமாண்டமாக இருக்கும்.
புதுடில்லி நிருபர் -

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X