சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இடிந்து விழுந்த சுவர்கள்: உயிர்ச்சேதம் தவிர்ப்பு

Added : நவ 08, 2021
Share
Advertisement
பெ.நா.பாளையம்:கனமழையால் இரண்டு வீடுகளின் சுவர்களும், 10 அடி உயரமுள்ள சுற்றுச்சுவரும் இடிந்துவிழுந்தன.வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால், பெரியநாயக்கன்பாளையம், துடியலுார் வட்டாரங்களில் விட்டு விட்டும், தொடர்ந்தும் கனமழை பெய்து வருகிறது. துடியலுார் ரயில்வே ஸ்டேஷன் ரோடு எம்.எல்.ஏ., அலுவலகத்திற்கு பின்புறம் உள்ள அண்ணா காலனியில், 150 குடும்பங்கள்
 இடிந்து விழுந்த சுவர்கள்: உயிர்ச்சேதம் தவிர்ப்பு

பெ.நா.பாளையம்:கனமழையால் இரண்டு வீடுகளின் சுவர்களும், 10 அடி உயரமுள்ள சுற்றுச்சுவரும் இடிந்துவிழுந்தன.வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால், பெரியநாயக்கன்பாளையம், துடியலுார் வட்டாரங்களில் விட்டு விட்டும், தொடர்ந்தும் கனமழை பெய்து வருகிறது. துடியலுார் ரயில்வே ஸ்டேஷன் ரோடு எம்.எல்.ஏ., அலுவலகத்திற்கு பின்புறம் உள்ள அண்ணா காலனியில், 150 குடும்பங்கள் வசிக்கின்றன.கனமழையால், இங்குள்ள மாற்றுத்திறனாளி லட்சுமி, அருகே வசிக்கும் ரஞ்சித் ஆகியோரது வீட்டு சுவர்கள் இடிந்து விழுந்தன.கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ., அருண்குமார், மாற்றுத்திறனாளியான லட்சுமிக்கு, 10 ஆயிரம், ரஞ்சித்துக்கு, 5,000 ரூபாய் உதவித்தொகை வழங்கினார். மேலும், அப்பகுதியில் சாய்ந்து கிடக்கும் மின்கம்பத்தை சரிசெய்யுமாறு மாநகராட்சி அதிகாரிகளை அறிவுறுத்தினார். இடிந்து விழுந்து நிலையில் உள்ள வீடுகளை, கணக்கெடுத்து, குடிசை மாற்று வாரியம் வாயிலாக, புதிய வீடுகள் கட்டித்தர எம்.எல்.ஏ.,விடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.சுற்றுச்சுவர் இடிந்தது:பெரியநாயக்கன்பாளையம் அருகே கூடலுார் கவுண்டம்பாளையம் பேரூராட்சி, பழையபுதுார் அருகே கவுசிகா நதி ஓரத்தில், 33 குடும்பங்கள் வசிக்கின்றன. கடும் மழையால், குடியிருப்புக்கு அருகே தனியாரால் கட்டப்பட்டு இருந்த, 10 அடி உயரமுள்ள சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. பொதுமக்களின் நடமாட்டம் இல்லாததால், உயிர் சேதம் இல்லை.சம்பவ இடத்தை, கூடலுார் கவுண்டம்பாளையம் பேரூராட்சி முன்னாள் தலைவர் அறிவரசு, முன்னாள் கவுன்சிலர் ஜனார்த்தனன் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X