அரசியல் செய்தி

தமிழ்நாடு

சேர்மன் பதவிக்கு போட்டி... சட்டரீதியாக சந்திக்க முடிவு...காய் நகர்த்திய தி.மு.க.,; விரக்தியில் அ.தி.மு.க.,!

Added : நவ 08, 2021
Share
Advertisement
சூலுார்;தி.மு.க.,வுக்கு தாவிய கவுன்சிலர்களால், அ.தி.மு.க.,வினர் மத்தியில் சலசலப்பையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.கடந்த உள்ளாட்சி தேர்தலில், சூலுார் ஒன்றியத்தில் உள்ள, 14 கவுன்சிலர் பதவி இடங்களில், அ.தி.மு.க., ஏழு இடங்களிலும், தி.மு.க., ஐந்து இடங்களிலும் வெற்றி பெற்றது. கணியூர் மற்றும் அரசூர் பகுதியில் சுயேச்சையாக நின்ற இருவர் வெற்றி பெற்றனர். இதில், மூன்றாவது வார்டில்

சூலுார்;தி.மு.க.,வுக்கு தாவிய கவுன்சிலர்களால், அ.தி.மு.க.,வினர் மத்தியில் சலசலப்பையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.கடந்த உள்ளாட்சி தேர்தலில், சூலுார் ஒன்றியத்தில் உள்ள, 14 கவுன்சிலர் பதவி இடங்களில், அ.தி.மு.க., ஏழு இடங்களிலும், தி.மு.க., ஐந்து இடங்களிலும் வெற்றி பெற்றது. கணியூர் மற்றும் அரசூர் பகுதியில் சுயேச்சையாக நின்ற இருவர் வெற்றி பெற்றனர். இதில், மூன்றாவது வார்டில் வென்ற சுயேச்சை வேட்பாளரான சுரேந்திர மோகன், அ.தி.மு.க.,வுக்கு ஆதரவு தெரிவித்தார்.
இதையடுத்து சேர்மன் பதவியை அ.தி.மு.க., மீண்டும் தக்கவைத்தது. தற்போது, ஆட்சி மாறியதும், காட்சிகளும் மாறி வந்தன. அதிருப்தியில் இருக்கும் அ.தி.மு.க.,வினரை வளைக்க தி.மு.க.,வினர் துாண்டில் போட துவங்கினர். இதில், துணைத்தலைவர் உள்ளிட்ட நான்கு கவுன்சிலர்கள் திடீரென தி.மு.க.,வுக்கு மாறியது, அ.தி.மு.க., வினர் மத்தியில் பெரும் சலசலப்பையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
அசட்டையாக!
அ.தி.மு.க., வினர் கூறுகையில்,'பதவி வழங்கிய அ.தி.மு.க.,வுக்கு விசுவாசமாக இருக்காமல், தி.மு.க.,வுக்கு மாறியது துரோக செயலாகும்.அவர்களை காலம் தண்டிக்கும். காய் நகர்த்தி, கவுன்சிலர்களை இழுத்த தி.மு.க.,வினரின் நடவடிக்கைகளை கண்காணித்து தடுக்காமல், எங்கள் கட்சி நிர்வாகிகள் அசட்டையாக இருந்தது வருத்தமளிக்கிறது' என்றனர்.
தி.மு.க.,வில் போட்டிசேர்மன் பதவியை பிடிக்க, தி.மு.க.,வில் போட்டி அதிகரித்துள்ளது. 9வது வார்டு கவுன்சிலர் தமிழரசி, நான்காவது வார்டு கவுன்சிலர் செல்வநாயகி, ஆறாவது வார்டு கவுன்சிலரும், முன்னாள் சேர்மனுமான ராஜேந்திரன் ஆகியோர் தலைவர் பதவியை பிடிக்க காய் நகர்த்தி வருகின்றனர். சட்டரீதியாக சந்திக்க முடிவுசூலுார் ஒன்றிய நிர்வாகத்தை தக்க வைத்துக்கொள்ள அனைத்து சட்ட ரீதியான நடவடிக்கைகளிலும் இறங்குவது என, அ.தி.மு.க., முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.அதற்காக, சட்ட நிபுணர்களுடன் ஆலோசனைகளை அக்கட்சியினர் துவக்கியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X