பொது செய்தி

தமிழ்நாடு

நீர் நிலை பாதுகாப்பு அவசியம் ;பருவமழை தாக்கம் அதிகரிப்பு

Added : நவ 08, 2021
Share
Advertisement
உடுமலை:வடகிழக்கு பருவமழை பொழிவின் தாக்கம் அதிகரித்துள்ளதால், ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளைப் பாதுகாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.உடுமலை மற்றும் சுற்றுப்பகுதியில், சுற்றுச்சூழல் மாசடைதல், பருவநிலை மாற்றங்கள், பருவமழை பொய்த்தல் போன்ற காரணங்களால் நீர்நிலைகள் வறண்டு, நிலத்தடி நீர்மட்டம் குறைகிறது. பல பகுதிகளில் நீர் நிலை ஆக்கிரமிப்புகளும்

உடுமலை:வடகிழக்கு பருவமழை பொழிவின் தாக்கம் அதிகரித்துள்ளதால், ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளைப் பாதுகாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.உடுமலை மற்றும் சுற்றுப்பகுதியில், சுற்றுச்சூழல் மாசடைதல், பருவநிலை மாற்றங்கள், பருவமழை பொய்த்தல் போன்ற காரணங்களால் நீர்நிலைகள் வறண்டு, நிலத்தடி நீர்மட்டம் குறைகிறது. பல பகுதிகளில் நீர் நிலை ஆக்கிரமிப்புகளும் அதிகரிக்கின்றன. குறிப்பாக, துார்வாரப்படாத பல நீர் நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டும், குப்பை கொட்டப்பட்டும் துார்ந்து போயுள்ளன.வறட்சி நிலவும் சூழ்நிலையில் மட்டுமே, நீர்நிலைகளை துார்வாரி அதனை முறையாகப் பராமரிக்க, துறை ரீதியான அதிகாரிகள் முயற்சி மேற்கொள்கின்றனர். தற்போது, மழையின் தாக்கம் அதிகரித்து வருவதால், நீர் நிலைகளைத் துார்வார வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.தன்னார்வலர்கள் கூறியதாவது: துார்ந்து போன நிலையில் உள்ள நீர்நிலைகளில் மழைநீர் தேங்காமல் வழிந்தோடுகிறது. நீர்நிலைகளில் தண்ணீர் தேங்காமல் போவதால் நிலத்தடி நீர்மட்டம் உயருவதில்லை.காலம் கடந்தாலும், நீர் நிலைகளின் அவசியத்தை உணர்ந்து, அதனை மீட்டெடுக்க வேண்டும். நீர்நிலைகளை துார்வாரி, நீர்வழித்தடங்களை செப்பனிட்டு, நீர்வளம் மிக்க பகுதிகளை பாதுகாக்க, அரசு அதிகாரிகள் முனைப்பு காட்ட வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X