மைதானம் இருக்கு... ஆனா இல்லை! வெளிப்படாத விளையாட்டு திறன்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மைதானம் இருக்கு... ஆனா இல்லை! வெளிப்படாத விளையாட்டு திறன்

Added : நவ 08, 2021
Share
நெகமம்;நெகமம் பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் விளையாட்டு மைதானம் இல்லாததால், மாணவிகள் விளையாட்டு திறனை வெளிப்படுத்த முடியாமல் உள்ளனர்.நெகமம் பேரூராட்சியில், ஆண்கள், பெண்கள் கல்வி பயல, தனித்தனியாக அரசு உயர்நிலைப்பள்ளியும், மேல்நிலைப்பள்ளியும் அமைந்துள்ளன.பெண்கள் உயர்நிலைப்பள்ளி கட்டடமானது, சின்ன நெகமம் ஜமீன்தாரால் தானமாக வழங்கப்பட்டதாகும். இக்கட்டடம் சமீபத்தில்,

நெகமம்;நெகமம் பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் விளையாட்டு மைதானம் இல்லாததால், மாணவிகள் விளையாட்டு திறனை வெளிப்படுத்த முடியாமல் உள்ளனர்.நெகமம் பேரூராட்சியில், ஆண்கள், பெண்கள் கல்வி பயல, தனித்தனியாக அரசு உயர்நிலைப்பள்ளியும், மேல்நிலைப்பள்ளியும் அமைந்துள்ளன.பெண்கள் உயர்நிலைப்பள்ளி கட்டடமானது, சின்ன நெகமம் ஜமீன்தாரால் தானமாக வழங்கப்பட்டதாகும். இக்கட்டடம் சமீபத்தில், புதுப்பிக்கப்பட்டது. பள்ளியில், நெகமம் மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களை சேர்ந்த, 100க்கும் மேற்பட்ட மாணவிகள் படிக்கின்றனர். ஆனால், மாணவிகள் விளையாட மைதானம் இல்லை. விளையாட்டு திறனை மேம்படுத்த வேண்டும்; மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்று, பரிசுகளை வெல்ல வேண்டும் என, ஆர்வம் இருந்தும் மைதான வசதி இல்லாததால், மாணவிகளின் அவதிப்படுகின்றனர்.இதனால், பள்ளி வளாகத்தில், கொடி கம்பத்தின் கீழ் உள்ள சிறு இடத்தில், இடத்துக்கு தகுந்தாற்போல விளையாட்டுகளை தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது. தொடர் ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், கோ - கோ விளையாட்டுக்கு போதிய இடவசதியில்லை.எனவே, பெண்கள் உயர்நிலைப்பள்ளிக்கு விளையாட்டு மைதானம் கிடைக்க, எம்.எல்.ஏ., எம்.பி., யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. மாணவிகளின் விளையாட்டு ஆர்வத்துக்கு, மைதானம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், இரண்டு ஏக்கரில் மைதானம் இருந்தும், விளையாட முடியாத அளவுக்கு கற்கள் பரவியுள்ளது. மைதானத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.நெகமத்தில் ஒரு பள்ளியில் மைதானம் இல்லை, மற்றொரு பள்ளியில் மைதானம் இருந்தும் சமதளமாக இல்லாததால், மாணவ, மாணவிகள் விளையாட முடியவில்லை என்ற நிலையை போக்க வேண்டும். விளையாட்டு ஆர்வத்தை ஊக்குவிக்க வேண்டுமென, பெற்றோரும் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X