ஒரு போன் போதுமே! குளத்தில் மழைநீர் நிரப்பணும்!

Added : நவ 08, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி - உடுமலை ரோட்டிலுள்ள,கோமங்கலத்தில் குளம் உள்ளது. இவ்வளவுமழை பெய்தும் குளம் நிரம்பவில்லை. குளம் மற்றும் நீர்வழிப்பாதையில் உள்ள ஆக்கிரமிப்பு அகற்றி,குளத்தில் நீர் நிரப்பி, நிலத்தடி நீர்மட்டத்தைபாதுகாக்க வேண்டும்.எஸ்.வினோத்,கோமங்கலம்.ரோட்டில் சிதறும் தேங்காய் மட்டைபொள்ளாச்சி - கோவை ரோட்டில், கோவில்பாளையம் அருகே, தென்னை நார் தொழிற்சாலைகளுக்கு கொண்டு

பொள்ளாச்சி - உடுமலை ரோட்டிலுள்ள,கோமங்கலத்தில் குளம் உள்ளது. இவ்வளவுமழை பெய்தும் குளம் நிரம்பவில்லை. குளம் மற்றும் நீர்வழிப்பாதையில் உள்ள ஆக்கிரமிப்பு அகற்றி,குளத்தில் நீர் நிரப்பி, நிலத்தடி நீர்மட்டத்தைபாதுகாக்க வேண்டும்.எஸ்.வினோத்,கோமங்கலம்.ரோட்டில் சிதறும் தேங்காய் மட்டைபொள்ளாச்சி - கோவை ரோட்டில், கோவில்பாளையம் அருகே, தென்னை நார் தொழிற்சாலைகளுக்கு கொண்டு செல்லும், தேங்காய் மட்டை அடிக்கடி சிதறி கிடக்கிறது. இதனால், வாகன விபத்து அபாயம் உள்ளதால், சிதறாமல் கொண்டு செல்ல வேண்டும்.எம்.சந்தோஷ்குமார்,கோவில்பாளையம்.ரோடு சந்திப்பில் வெளிச்சமில்லைபொள்ளாச்சி மீன்கரை ரோட்டில், வேளாண் விரிவாக்க மையம் அருகே, மோதிராபுரம் ரோடு பிரிகிறது. இவ்வழித்தடம் கோட்டூர் ரோட்டுக்கான புறவழிச்சாலையாக உள்ளது. அதிக வாகனங்கள் செல்வதால், ரோடு பிரியும் இடத்தில், மின் விளக்கு வசதி ஏற்படுத்த வேண்டும்.ஆர்.கலைவாணி,பொள்ளாச்சி.ரோட்டை கொஞ்சம் கவனிங்க!வால்பாறையில் இருந்து சோலையாறு செல்லும் வழித்தடத்தில், பல இடங்களில் ரோடு குறுகலாகவும், மலைச்சரிவில் தடுப்புகள் இன்றியும் உள்ளது. விபத்துகளை தவிர்க்க, ரோட்டை விரிவுபடுத்தி, தேவையான இடங்களில் தடுப்புகள் அமைக்க வேண்டும்.எஸ்.மைக்கேல்ராஜ்,வால்பாறை.'பஸ் பே' அமைப்பது நல்லதுஆனைமலை நுழைவுவாயிலில் ரோடுஅகலப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், பஸ்கள்ரோட்டோரத்தில் நிறுத்தி இயக்க வசதியாக, 'பஸ் பே' அமைக்கவில்லை. இதனால், நடுரோட்டில் பஸ்கள் நிறுத்துவதால், மற்ற வாகனங்கள் செல்வதற்குஇடையூறு ஏற்படுகிறது.எஸ்.சுந்தரவடிவேல்,ஆனைமலை.ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?மடத்துக்குளம் நால்ரோடு பகுதியில், காணப்படும் ஆக்கிரமிப்புகளால் விபத்துகள் ஏற்படுகிறது. இதனால் பொதுமக்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. தொடர்ந்து நடக்கும் விபத்துகளை தவிர்க்க ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.-ஸ்ரீ. குமார்,மடத்துக்குளம்.நிழற்கூரை புதுப்பிக்கப்படுமா?கணியூர் ஆஸ்பத்திரி மேடு பகுதியில் உள்ளநிழற்கூரை பராமரிப்பின்றி காணப்படுகிறது.இதை பயன்படுத்தும் பொதுமக்கள் கடும்சிரமத்துக்குள்ளாகின்றனர். எனவே இந்த நிழற்கூரையை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.- ரா .காந்தி,ஸ்ரீராமபட்டணம்.கழிவுகள் வீச்சுகணியூர்புதுார் மடம் பகுதியிலிருந்து, காரத்தொழுவு செல்லும் ரோட்டில் கழிவுகள் கொட்டப்படுகிறது. இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும் சுகாதாரக்கேடு ஏற்படுகிறதுகா.முருகவேல்,கணியூர்.நிழற்கூரை வேண்டும்மடத்துக்குளம் கே.டி.எல்., விநாயகர் கோவில் பஸ் ஸ்டாப்பில் நிழற்கூரை இல்லை. இங்கு வரும் பயணிகள் வெயிலிலும், மழையிலும் கடும் சிரமத்துக்குள்ளாக வேண்டியதுள்ளது. எனவே இந்த இடத்தில் நிழற்கூரை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.வே. பழனிச்சாமி,கே.டி.எல், மடத்துக்குளம்.ரோடுகள் சேதம்உடுமலை பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் ரோடுகள்சேதமடைந்து, காணப்படுகிறது. இதனால், பஸ்கள் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. பொதுமக்களும்,பயணிகளும் அவதிக்குள்ளாகின்றனர்.இந்த ரோட்டை சீரமைக்க வேண்டும்.ஆர்.சங்கர்,உடுமலை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X