பொது செய்தி

தமிழ்நாடு

2 டன் பட்டாசு குப்பை அகற்றியது நகராட்சி

Added : நவ 08, 2021
Share
Advertisement
உடுமலை:தீபாவளி பண்டிகையையொட்டி, நகரில், 2 டன் பட்டாசு குப்பை அகற்றப்பட்டுள்ளதாக, நகராட்சி சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.தீபாவளி பண்டிகையில், பட்டாசு வெடிப்பது மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இதனால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் பட்டாசு வெடித்து மகிழ்கின்றனர்.அவ்வகையில், உடுமலை நகரில், மக்கள் அனைவரும் தீபாவளி பண்டிகையை

உடுமலை:தீபாவளி பண்டிகையையொட்டி, நகரில், 2 டன் பட்டாசு குப்பை அகற்றப்பட்டுள்ளதாக, நகராட்சி சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.தீபாவளி பண்டிகையில், பட்டாசு வெடிப்பது மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இதனால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் பட்டாசு வெடித்து மகிழ்கின்றனர்.அவ்வகையில், உடுமலை நகரில், மக்கள் அனைவரும் தீபாவளி பண்டிகையை பட்டாசு வெடித்து கொண்டாடினர். வழக்கமாக தீபாவளி முடிந்த சில நாட்களுக்கு அனைத்து பகுதிகளிலும் பட்டாசு குப்பை பரவலாக காணப்படும்.அவற்றை அப்புறப்படுத்துவது நகராட்சிக்கு பெரும் சவாலாக இருக்கும். அவ்வகையில், வழக்கமாக, குப்பை சேகரிக்கப்பட்ட நிலையில், 2 டன் குப்பை அகற்றப்பட்டுள்ளது.நகராட்சி சுகாதாரத்துறையினர் கூறியதாவது:தீபாவளி பண்டியின்போது, குப்பை சேகரிப்பதில் கூடுதல் சுமை ஏற்படும். பட்டாசுகளால், காகித குப்பை அதிகம் சேகரிக்க வேண்டி இருக்கும். தொகுப்பு பட்டாசுகள், இரவு நேர பட்டாசுகள் அதிகம் வெடிக்கப்பட்டுள்ளதால், அட்டை குப்பை அதிகம் காணப்பட்டன. மக்களிடம் விழிப்புணர்வு இல்லாததால், அவற்றை சிலர் கழிவுநீர் ஓடைகளில் வீசி எறிந்துள்ளனர். அவற்றை அப்புறப்படுத்த கூடுதம் நேரம் பிடித்தது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X