இன்றைய ‛கிரைம் ரவுண்ட் அப்'

Updated : நவ 08, 2021 | Added : நவ 08, 2021
Share
Advertisement
இந்திய நிகழ்வுகள்பயங்கரவாதிகள் சுட்டு போலீஸ்காரர் பலிஸ்ரீநகர்-ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் பலியானார். ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் சமீபகாலமாக அப்பாவி மக்களை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.ஸ்ரீநகரின் படமாலு பகுதியை சேர்ந்தவர் டவுசிப் அகமது. ஜம்மு - காஷ்மீர் போலீசில்
இன்றைய, கிரைம், ரவுண்ட் அப்,


இந்திய நிகழ்வுகள்பயங்கரவாதிகள் சுட்டு போலீஸ்காரர் பலி

ஸ்ரீநகர்-ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் பலியானார். ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் சமீபகாலமாக அப்பாவி மக்களை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.ஸ்ரீநகரின் படமாலு பகுதியை சேர்ந்தவர் டவுசிப் அகமது. ஜம்மு - காஷ்மீர் போலீசில் கான்ஸ்டபிளாக பணியாற்றி வந்தார். நேற்றிரவு பணி முடிந்து, வீட்டுக்கு அவர் வந்து கொண்டிருந்தார். அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள், அகமதை நோக்கி சரமாரியாக சுட்டுவிட்டு தப்பியோடிவிட்டனர். ரத்த வெள்ளத்தில் விழுந்த அகமது, பரிதாபமாக உயிரிழந்தார். தாக்குதல் நடத்தியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

மருத்துவமனை மீது புகார்

புனே: மஹாராஷ்டிராவின் அகமது நகர் மாவட்ட மருத்துவமனையில் நேற்று முன்தினம் ஏற்பட்ட தீ விபத்தில், அவசர சிகிச்சை பிரிவில் இருந்த கொரோனா நோயாளிகள் 11 பேர் பலியாகினர். இதுகுறித்த விசாரணைக்கு ஏழு பேர் குழு அமைக்கப்பட்டு உள்ளது. 'மருத்துவமனை நிர்வாகம், நாங்கள் அளித்த பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான பரிந்துரைகளை முழுமையாக பின்பற்றவில்லை' என தீயணைப்பு அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்

பா.ஜ., பிரமுகர் கொலை

காந்தி: மேற்கு வங்கத்தின் புர்பா மேதினிபூர் மாவட்டம் பகபன்பூர் பகுதியில் உள்ள ஆற்றில், முகமதுபூர் கிராமத்தைச் சேர்ந்த பா.ஜ., நிர்வாகி சம்பு மைதி, கத்திக்குத்து காயங்களுடன் நேற்று பிணமாக கிடந்தார். தங்கள் கட்சியைச் சேர்ந்த சம்புவை, திரிணமுல் காங்., தொண்டர்கள் கொன்றதாக பகபன்பூர் பா.ஜ., - எம்.எல்.ஏ., ரவீந்திரநாத் குற்றஞ்சாட்டி உள்ளார்

கையெறி குண்டுகள் சிக்கின

மங்களூரு: கர்நாடகாவின் மங்களூரை அடுத்த பெல்தங்கடியில், ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் சிலர் நேற்று முன்தினம் நடை பயிற்சி மேற்கொண்டனர். அங்குள்ள ஓய்வு பெற்ற ராணுவ வீரர் வீட்டின் அருகே, ராணுவ ஆயுத தொழிற்சாலையில் 1980ல் தயாரான ஐந்து கையெறி குண்டுகளை பார்த்த அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தகவல் அறிந்து குண்டுகளை கைப்பற்றிய போலீசார் பரிசோதனைக்கு அனுப்பியதுடன், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்


தமிழக நிகழ்வுகள்


latest tamil news


நெரிசலில் சிக்கித் தவித்த மக்கள்

அன்னுார்:அன்னுார் நகரில் ஏற்பட்ட கடும் போக்குவரத்து நெரிசலில் மக்கள் சிக்கித் தவித்தனர்.கோவை--சத்தி தேசிய நெடுஞ்சாலை, மேட்டுப்பாளையம்--அவிநாசி மாநில நெடுஞ்சாலைகளுக்கு மையமாக அன்னுார் உள்ளது.

பள்ளி, கல்லுாரிகள், தமிழக அரசு அலுவலகங்கள் நான்கு நாள் தீபாவளி விடுமுறை முடிந்து, சொந்த ஊர் திரும்புவோர், விடுதிகளுக்கு செல்வோர் என, நேற்று பல ஆயிரம் வாகனங்கள் அன்னுார் வழியாக சென்றன. இதனால் அன்னுாரில், கோவை சாலை, மேட்டுப்பாளையம் சாலை மற்றும் பிரதான சாலை சந்திக்கும் இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீசார் பலர் மூன்று சாலை சந்திப்பு மற்றும் சத்தி சாலை சந்திப்பில் நின்று வாகனங்களை ஒழுங்குபடுத்தினர்.

அன்னுார் நகரை கடப்பதற்கு, 15 நிமிடங்களுக்கு மேலானது. கோவை சாலை, சத்தி சாலை, அவிநாசி சாலையில், ஒரு கி.மீ., துாரத்துக்கு மேல் வாகனங்கள் வரிசைகட்டி நின்றன. இதனால், அரசு மற்றும் தனியார் பஸ்கள் குறிப்பிட்ட நேரத்தில் புறப்பட்டு செல்ல முடியாமல், 45 நிமிடங்களுக்கு மேல் தாமதமாகின.'போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண, புறவழிச்சாலை, உயர்மட்ட மேம்பாலம் அமைத்தல், ஆக்கிரமிப்பு அகற்றுதல் ஆகிய நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்' என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


latest tamil news


தென்னை மரங்கள் துவம்சம்: விவசாயிகள் சோகம்
மேட்டுப்பாளையம்:காந்தவயல் பகுதியில் காட்டு யானைகள் இரவு நேரத்தில் விவசாய நிலத்துக்குள் புகுந்து தென்னை, வாழை மரங்களை கீழே தள்ளி சேதப்படுத்தியது.இதில் இரண்டு மின் கம்பங்கள் சேதம் அடைந்துள்ளன.

சிறுமுகை வனப்பகுதி அருகே, காந்தவயல், காந்தையூர், மொக்கை மேடு, மேலுார், உளியூர் ஆகிய பகுதிகள் உள்ளன. காந்தவயல் பகுதியில் இரவில் நான்கு காட்டு யானைகள், தென்னந்தோப்பில் புகுந்து, 15 தென்னை மரங்களையும், வாழைத் தோட்டத்தில் புகுந்து, 50 வாழை மரங்களையும் கீழே சாய்த்து, குருத்துக்களை சாப்பிட்டு சென்றன.வனப்பகுதியில் இருந்து விவசாய நிலங்களுக்குள் யானை வருவதை வனத்துறையினர் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மின்வேலி மற்றும் அகழி அமைப்பதுடன், யானைகள் சேதம் செய்த விவசாய பயிர்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கைவிடுக்கின்றனர்.

டூவிலர் கார் மோதல்: இருவர் பலி

நிலக்கோட்டை--திண்டுக்கல் மாவட்டம் சிலுக்குவார்பட்டி அருகே டூவீலரும் காரும் மோதிய விபத்தில் இரண்டு பேர் பலியாகினர்.மதுரை பெருங்குடியை சேர்ந்த வேதமாணிக்கம் மகன் காமராஜ் 20, பெருமாள் மகன் அஜித் கண்ணன் 20.இருவரும் தீபாவளி விடுமுறையை கொடைக்கானலில் கழித்து விட்டு நேற்று டூவீலரில் ஊர் திரும்பினர். ஹெல்மெட் அணியவில்லை.மாலை 4:20 மணிக்கு சிலுக்குவார்பட்டி சிவன் கோவில் அருகே உள்ள வளைவில் திரும்புகையில் எதிரே வந்த காரில் மோதினர். இதில் அஜித் கண்ணன் சம்பவ இடத்தில் பலியானார்.காமராஜ் துாக்கி வீசப்பட்டு உடல் 15 அடி உயரத்தில் மின்கம்பியில் தொங்கியது. உடலை நிலக்கோட்டை தீயணைப்பு துறையினர், போலீசார் மீட்டனர்.

பசுவை கொன்ற சிறுத்தை

மூணாறு--கேரளா மூணாறு அருகே கடலார் எஸ்டேட் ஈஸ்ட் டிவிஷன் குடியிருப்பு பகுதிக்குள் நேற்று முன்தினம் சிறுத்தை நுழைந்தது.

இதனால் அச்சமடைந்த தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வீடுகளுக்குள் பதுங்கினர். சிறிது நேரத்தில் அங்கிருந்து சென்ற சிறுத்தை வெஸ்ட் டிவிஷன் மைதானம் அருகே பழனிசாமி என்பவருக்கு சொந்தமான கறவை பசுவை தாக்கி கொன்றது.இங்கு சில ஆண்டுகளுக்கு முன் வீட்டின் முற்றத்தில் அமர்ந்திருந்த மூதாட்டி மாயமானார். அவரை புலி இழுத்து சென்றது தெரிய வந்தது. அதேபோல் ஏராளமான பசுக்கள், புலி, சிறுத்தையிடம் சிக்கி பலியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

போராட்டத்துக்கு திரண்ட 1,000 விவசாயிகள் கைது

திருப்பூர்-காங்கேயம் பொதுப்பணித் துறை அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்த முயன்ற, 1,000 விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.

'பரம்பிகுளம் - ஆழியாறு பாசன தண்ணீர் திறப்பை முறைப்படுத்த வேண்டும்; வாய்க்காலில் தண்ணீர் திருட்டை தடுக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' உள்ளிட்ட கோரிக்கையை விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர்.இது தொடர்பாக, திருப்பூர் மாவட்டம், காங்கேயம் பொதுப்பணித் துறை அலுவலகத்தில் நேற்று உள்ளிருப்பு போராட்டம் நடத்தவும் முடிவு செய்தனர். இதற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. நேற்று காங்கேயம் நகர எல்லையில், போலீசார் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு, தீவிர வாகன சோதனைக்கு பின்னரே, வாகனங்களை நகருக்குள் அனுமதித்தனர்.

பொதுப்பணித் துறை அலுவலகத்துக்கு முன்புள்ள காலியிடத்தில், பந்தல் அமைத்து காத்திருந்த விவசாயிகளை போலீசார் கைது செய்தனர். விவசாயிகளை நகருக்குள் வராமல் தடுத்து, கைது செய்தனர்.இதற்கிடையில், காங்கேயம் - வெள்ளகோவில் ரோடு பகவதிபாளையம் பிரிவில் விவசாயிகள் திரண்டனர். அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அவர்களையும் சேர்த்து, மொத்தம் 1,000 பேர் கைது செய்யப்பட்டனர்.


உலக நிகழ்வுகள்


latest tamil news


கொலை முயற்சியில் தப்பினார் ஈராக் பிரதமர்

பாக்தாத்-ஆளில்லா குட்டி விமானங்கள் வாயிலாக ராக்கெட் குண்டுகளை வீசி, ஈராக் பிரதமரை கொலை செய்ய முயற்சி நடந்தது. இதில் அவர் எந்த பாதிப்புமின்றி உயிர் தப்பினார்.

மேற்காசியாவைச் சேர்ந்த ஈராக்கில் கடந்த மாதம் பார்லி., தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் முறைகேடு நடந்ததாக கூறி, படுதோல்வி அடைந்த ஈரான் ஆதரவு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.போராட்டம்நேற்று முன்தினம் நடந்த போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். இதனால் போராட்டம் மேலும் தீவிரமடைந்துள்ளது.தலைநகர் பாக்தாதில் ஜனாதிபதி மாளிகை, பிரதமர் மாளிகை, அரசுஅலுவலகங்கள், துாதரகங்கள் ஆகியவை அமைந்துள்ள பகுதியை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டுள்ளனர்.

இந்நிலையில் நேற்று பிரதமர் முஸ்தபா அல் - கதிமி வசிக்கும் மாளிகை மீது 'ட்ரோன்' எனப்படும் இரு குட்டி விமானங்களில் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. விசாரணைஇதில் பிரதமர் முஸ்தபா அல் - கதிமி உயிர் தப்பினார். ஆனால் அவரது பாதுகாப்பு படையினர் ஏழு பேர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து கொலை முயற்சியில் இருந்து இறைவன் அருளால் உயிர் தப்பியதாக, முஸ்தபா 'டுவிட்டரில்' செய்தி வெளியிட்டார்.

அத்துடன், மக்களை அமைதி காக்கும்படியும் அவர் கேட்டுக் கொண்டார். இதைத் தொடர்ந்து 'டிவி' யில் தோன்றிய முஸ்தபா, ''ராக்கெட் குண்டு வீச்சு, ட்ரோன் தாக்குதல் போன்றவற்றால் நல்ல எதிர்காலத்தை உருவாக்க முடியாது என்பதை கிளர்ச்சியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்,'' என்றார். முஸ்தபா மீது நடந்த கொலை முயற்சி குறித்து புலனாய்வு அமைப்புகள் விசாரணை நடத்தி வருகின்றன. இதற்கிடையே முஸ்தபா மீதான தாக்குதலுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துஉள்ளது.

Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X