பொது செய்தி

தமிழ்நாடு

நிறுத்திய ரயில்களை இயக்கும் வரை போராட்டம்: பயணிகள் நலச்சங்கம் அறிவிப்பு

Added : நவ 08, 2021
Share
Advertisement
கிணத்துக்கடவு:பொள்ளாச்சி - கோவை வழித்தடத்தில் தினமும் சிறப்பு ரயில்கள் இயக்க அறிவித்திருப்பது வரவேற்க கூடியது. இவ்வழித்தடத்தில் இயக்கப்பட்ட மூன்று எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்காவிட்டால் போராட்டம் தொடரும், என, ரயில் பயணிகள் நலச்சங்கள் அறிவித்துள்ளது.பொள்ளாச்சி - போத்தனுார் வரையிலான, 40 கி.மீ., துார ரயில்பாதை மின்மயமாக்கல் பணி நிறைவு பெற்ற நிலையில், ரயில்கள் இயக்கப்படும்

கிணத்துக்கடவு:பொள்ளாச்சி - கோவை வழித்தடத்தில் தினமும் சிறப்பு ரயில்கள் இயக்க அறிவித்திருப்பது வரவேற்க கூடியது. இவ்வழித்தடத்தில் இயக்கப்பட்ட மூன்று எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்காவிட்டால் போராட்டம் தொடரும், என, ரயில் பயணிகள் நலச்சங்கள் அறிவித்துள்ளது.பொள்ளாச்சி - போத்தனுார் வரையிலான, 40 கி.மீ., துார ரயில்பாதை மின்மயமாக்கல் பணி நிறைவு பெற்ற நிலையில், ரயில்கள் இயக்கப்படும் என எதிர்பார்ப்பு பயணிகள் இடையே ஏற்பட்டது.இதற்கு நேர்மாறாக, ரயில்வே ஸ்டேஷன் இழுத்து மூடப்பட்டு, ஸ்டேஷன் மாஸ்டர் உள்ளிட்ட ஊழியர்கள் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டனர்.அதிருப்தி அடைந்த கிணத்துக்கடவு ரயில் பயணிகள் நலச்சங்கம் சார்பில், பாலக்காடு கோட்ட மேலாளருக்கு கடும்கண்டனம் தெரிவிக்கப்பட்டது. 'வாட்ஸ் ஆப்'பில் உறுப்பினர்களை அதிகளவில் சேர்த்து, விரைவில், போராட்டம் நடத்தவும் திட்டமிடப்பட்டிருந்தது.இந்நிலையில், வரும், 10 மற்றும் 13ம் தேதியில் இருந்து, பழநி -கோவை, பொள்ளாச்சி -கோவை வரையிலான தினசரி ரயில் இயக்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.நீண்ட தாமதத்துக்கு பிறகான அறிவிப்புக்கு, கிணத்துக்கடவு ரயில் பயணிகள் நலச்சங்கத்தினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.சங்கத்தின் அறிக்கை: இது முழுமையான தீர்வு ஆகாது. 1928ம் ஆண்டு முதல் கிணத்துக்கடவு வழியாக இயங்கிய கோவை -ராமேஸ்வரம், கோவை -துாத்துக்குடி மற்றும் கோவை - செங்கோட்டை ரயில்களை மீண்டும் இயக்க தொடர்ந்து வலியுறுத்தப்படும்.புதிதாக எதையும் கேட்கவில்லை. இழந்ததை மட்டுமே கேட்கிறோம். தென்மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களை மேட்டுப்பாளையத்தில் இருந்தும், சென்னை செல்லும் ரயில்களை பொள்ளாச்சியில் இருந்து, கிணத்துக்கடவு வழியாக இயக்க வேண்டும்.அதேபோல், தென் மாவட்டத்தில் இருந்து கோவை வரை செல்லும் ரயில்களை, மேட்டுப்பாளையம் வரை இயக்க வேண்டும். இதற்காக, தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.கோட்டம் மாற்ற வலியுறுத்துவேன்!கிணத்துக்கடவு ரயில்வே ஸ்டேஷன் மூடப்பட்டது குறித்து தகவல் அறிந்த, எம்.எல்.ஏ., தாமோதரன் ரயில்வே ஸ்டேஷனுக்கு விசிட் செய்தார். ஸ்டேஷன் வளாகத்தை பார்வையிட்டு, பணியில் இருந்த ஊழியரிடம் விபரம் கேட்டறிந்தார்.அவர் கூறுகையில், ''கிணத்துக்கடவு, பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷன்களை மதுரை அல்லது சேலம் கோட்டத்துடன் இணைக்க வேண்டும் என, ரயில்வே உயர் அதிகாரிகளுக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது.தவிர, வழித்தடத்தில் இருந்த கோவில்பாளையம், செட்டிபாளையம் ரயில்வே ஸ்டேஷன்களை மீண்டும் திறக்க வலியுறுத்தப்படும்.மீட்டர் கேஜ் ரயில்பாதையாக இருந்த போது, இயக்கப்பட்ட அனைத்து எக்ஸ்பிரஸ் மற்றும் பாசஞ்சர் ரயில்களையும் மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என, பாலக்காடு கோட்ட மேலாளர், தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆகியோரை நேரில் சந்தித்து, வலியுறுத்த உள்ளேன்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X