பொது செய்தி

தமிழ்நாடு

சூரசம்ஹார விழாவுக்கு அனுமதியில்லை: கோவில் நிர்வாகம் அறிவிப்பு

Added : நவ 08, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி:பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில், சூரசம்ஹாரத்திருவிழாவில் பக்தர்கள் பங்கேற்க அனுமதியில்லை, என, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும்சூரசம்ஹாரத்திருவிழா விமரிசையாக கொண்டாடப்படும். திருவிழா துவங்கியதும் பக்தர்கள் விரதமிருந்து, சூரசம்ஹாரம் முடிந்ததும் விரதம் முடிப்பது வழக்கம்.பக்தர்கள் தண்டு விரதம்

பொள்ளாச்சி:பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில், சூரசம்ஹாரத்திருவிழாவில் பக்தர்கள் பங்கேற்க அனுமதியில்லை, என, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும்சூரசம்ஹாரத்திருவிழா விமரிசையாக கொண்டாடப்படும். திருவிழா துவங்கியதும் பக்தர்கள் விரதமிருந்து, சூரசம்ஹாரம் முடிந்ததும் விரதம் முடிப்பது வழக்கம்.பக்தர்கள் தண்டு விரதம் இருப்பது, பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமிகோவிலில் சிறப்பாக கடைபிடிக்கப்படுகிறது. கடந்தாண்டு கொரோனா பரவல் காரணமாக, சூரசம்ஹாரம் ரத்து செய்யப்பட்டது.இந்தாண்டு, கொரோனா தொற்று பரவல் குறைந்து, இயல்பு நிலை திரும்பியுள்ள நிலையில், சூரசம்ஹார திருவிழா விமரிசையாக கொண்டாடப்படும் என்ற எதிர் பார்ப்பு நிலவியது.இந்நிலையில், அரசு அறிவுறுத்தலின் படி, சூரசம்ஹாரத் திருவிழாவுக்கு பக்தர்களுக்கு அனுமதியில்லை என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.கோவில் நிர்வாகம் தரப்பில் கூறியதாவது: கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில், திருவிழாக்கள், உற்சவங்கள், சுவாமி திருவீதி உலாக்களில் பக்தர்கள் பங்கேற்க தடை செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.இந்தாண்டு, நாளை, 9ம் தேதி நடைபெறும் சூரசம்ஹாரத் திருவிழாவிலும், 10ம் தேதி சுவாமி திருக்கல்யாண உற்சவம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பக்தர்கள் சுவாமி தரினசம் செய்ய அனுமதியில்லை.எனவே, விழாவுக்காக நடத்தப்படும் காப்பு கட்டுதல், நான்கு கால அபிேஷக ஆராதனைகள், வேல் வாங்கும் உற்சவம், சூரசம்ஹாரம், மகா அபிேஷகம், திருக்கல்யாண உற்சவம் ஆகிய அனைத்து நிகழ்ச்சிகளுக்கும், இந்தாண்டு பக்தர்கள் அனுமதியின்றி, வழக்கம் போல கோவில் வளாகத்தில் நடைபெறும். பொதுமக்கள் வீடுகளில் விரதம் இருந்து வழிபாடு செய்து கொள்ளலாம்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.பக்தர்கள் ஏமாற்றம்!பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில், சூரசம்ஹாரத் திருவிழாவையொட்டி விரதமிருக்கும் பக்தர்கள், கோவிலுக்கு அதிகளவு வருவார்கள். சுவாமிக்கு கால பூஜை நடக்கும் போது கந்த சஷ்டி கவசம் படித்து வழிபடுவர்.கோவில் வளாகத்தில், பெண்கள் நாள் முழுக்க கந்த சஷ்டி கவசம் படித்து, கடும் விரதம் இருப்பார்கள். இந்தாண்டு சூரசம்ஹார விழாவில் பங்கேற்க அனுமதியில்லை என்பதால் பக்தர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.அறநிலையத்துறை அதிகாரிகளின் அறிவிப்புக்கு, ஹிந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. அரசு அறிவிப்பை திரும்ப பெறக்கோரியும், சூரசம்ஹார நிகழ்வில் பக்தர்கள் பங்கேற்க அனுமதி வழங்க கோரியும், போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X