பொது செய்தி

தமிழ்நாடு

மூன்றாவது அலை வந்தாலும் பாதிப்பு குறைவாகவே இருக்கும்

Updated : நவ 08, 2021 | Added : நவ 08, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
ஈரோடு-''கொரோனா மூன்றாவது அலை வந்தாலும், நமக்கு ஏற்படக்கூடிய பாதிப்பு மிக மிக குறைவாகவே இருக்கும்,'' என, இந்திய மருத்துவ சங்கமான ஐ.எம்.ஏ., தேசிய தலைவர் ஜெயலால் கூறினார்.ஈரோடில் அவர் அளித்த பேட்டி:இந்தியா முழுதும் அலோபதி மருத்துவம் சார்பில், கொரோனா நோயாளிகளுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் விரைவில் நடமாடும் வாகனம் வாயிலாக,

ஈரோடு-''கொரோனா மூன்றாவது அலை வந்தாலும், நமக்கு ஏற்படக்கூடிய பாதிப்பு மிக மிக குறைவாகவே இருக்கும்,'' என, இந்திய மருத்துவ சங்கமான ஐ.எம்.ஏ., தேசிய தலைவர் ஜெயலால் கூறினார்.



latest tamil news


ஈரோடில் அவர் அளித்த பேட்டி:இந்தியா முழுதும் அலோபதி மருத்துவம் சார்பில், கொரோனா நோயாளிகளுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் விரைவில் நடமாடும் வாகனம் வாயிலாக, கிராமங்கள் தோறும் சென்று, புற்று நோயாளிகளை கண்டறிந்து சிகிச்சை அளிக்க, ஒரு பஸ் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது.


latest tamil news


ஆனால், அந்த அலையால் நமக்கு ஏற்படக்கூடிய பாதிப்பு மிக மிக குறைவாகத்தான் இருக்கும். அதற்கு காரணம் ஏராளமானோர், கொரோனா தடுப்பூசி செலுத்தி உள்ளனர். கொரோனா நோய்க்கான மாத்திரை, அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நாங்கள் அதை முழுமையாக ஏற்றுக் கொள்ளவில்லை. மத்திய அரசின் ஆணை, சுகாதாரத் துறை அனுமதித்தால் மட்டுமே, மாத்திரையை பயன்படுத்துவோம்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
08-நவ-202118:43:28 IST Report Abuse
அப்புசாமி அதனால என்ன? இப்போதைக்கு பாதிப்பு இருக்காதுன்னு சொல்லிவெப்போம். ஒருவேளை பாதிப்பு அதிகமாச்சுன்னா நாங்களே எதிர்பாக்கலைன்னு சொல்லிடலாம். இல்லேன்னா, பெரியவரை விட்டு நேருதான் காரணம்னு பேசச் சொல்லிடலாம். ஜனங்கதான் எதைச் சொன்னாலும் நம்புவாங்களே...
Rate this:
Cancel
raja - Cotonou,பெனின்
08-நவ-202114:51:38 IST Report Abuse
raja போட்றா வெடியை... குடுடா விடியலுக்கு "கொரானா கொண்டான்" என்ற பட்டத்தை....
Rate this:
Sidhaarth - SENGOTTAI ,இந்தியா
08-நவ-202116:55:20 IST Report Abuse
Sidhaarthகங்கையில் பிணங்களை மிதக்க விட்டவர்க்கு என்ன பட்டம் குடுக்கலாம் ஜி...
Rate this:
Cancel
S.Baliah Seer - Chennai,இந்தியா
08-நவ-202112:15:22 IST Report Abuse
S.Baliah Seer நீங்கள் ஆவலோடு எதிர்பார்த்த கொரோனா மூன்றாம் அலை என்ற ஒன்று இல்லவே இல்லை. காய்ச்சல் பலவித காரணங்களால் வரும் என்பதை கொரோனா காய்ச்சலா என்று மாற்றி மருத்துவ மனைகளில் அட்மிட் செய்து 5-லட்சம் முதல் 20 லட்சம் வரை கறந்தீர்கள். தனியாக சிறு கிளினிக் நடத்திய டாக்டர்களை மிரட்டி கிளினிக்கை மூடும்படி செய்தீர்கள். சுருக்கமாக சொன்னால் காய்ச்சல் வந்தவர்களுக்கு மருத்துவ வசதி கிடைக்காமல் அதே சமயம் பெரிய பெரிய மருத்துவ மனைகளில் அட்மிட் ஆகும் நிலையை உண்டாக்கினீர்கள்.பெரும்பாலான மக்களும், மருத்துவர்களும் விழித்துக் கொண்டுவிட்டார்கள். இனி மூன்றாம் அலை என்று அரசியல்வாதிகள் போல் ஏமாற்று பேச்சையும், மக்களுக்கு கிலி உண்டாக்கும் பேச்சையும் கொட்டாதீர்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X